பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவலம் 9 27 படுத்திக் காட்டும் வன்மை, ஆசிரியனைப் பொறுத்ததே. உடலுக்கு நேரும் துன்பமும் அவலத் தைத் காட்டுகிறது. அதைவிட அதிகமாக, மனம் துன்ப மடையும்பொழுது அவலம் மிகுதிப்படுகிறது. இவற்றுள், அவலத் தலைவனின் வீழ்ச்சிக்குக் காரண மாகக் காட்டப்படும் பொருள்களுள் 'விதி' என்ற ஒன்று மிக இன்றியமையாதது. விதி என்று கூறினவுடன் அது கையாலாகாதவர்கள் கூறும் சமாதானம் என்ற முடிபுக்கு வருதல் தவறு. உலகிடை எத்தனையோ செயல்கள் நடைபெறுகின்றன. நமது அறிவை எவ்வளவு தீட்டிக் கொண்டு அவற்றிற்கெல்லாம் காரணம் என்னவென்று ஆராய்ந்தாலும் ஒரு முடிவுக்கு வர இயலுவதில்லை. உலகில் நடைபெறுகிற செயல்கள் எல்லாம் காரண காரியத் தொடர்பால் கட்டுப்படுத்தப்படுவதில்லை. மனிதனது செயல்கள் நிச்சயமாகப் பலனைத் தந்தே தீரும். ஆனால், அவை எப்பொழுது பலன் தரும் என்று கூறுவதற்கில்லை. மேலே கல்லை எறிந்தால் அது கீழே விழுந்தே தீரும்; ஆனால், அவை எப்பொழுது பலன் தரும் என்று கூறுவதற்கில்லை. மேலே கல்லை எறிந்தால் அது கீழே விழுந்தே தீரும்; எறியப்படும் வேகத்திற்கேற்ப, உடனேயும் காலந் தாழ்ந்தும் விழும்; உடனே விழினும், சிறிது காலந்தாழ்ந்து விழினும் விழுதல் என்பது தவறாது. மேலும், கல்லை எறிந்தால், அது திரும்புங்கால், கல்லாகவே வருமே தவிர, மலர் மாலை யாக வருதல் இயலாத காரியம். இக் கருத்தேபற்றி நல் வினையின் பயன் நன்மையாகவும், தீவினையின் பயன் தீமையாகவும் வந்து தீரும் என்று கூறப்படுகின்றன. சில செயல்களின் பயன் பிறவிதோறுந் தொடர்ந்து வருதல் உண்டு. எனவே, ஒரு பிறவியில்