பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவலம் 29 கானும் தரத்ததன்று. ஒருவேளை உள்ளுணர்வால் காணலாமேனும், அவ்வழியின் நியாயத்தை எடுத்துக் கூற முடியாது. எனவே, நமது விவகார அறிவால் காரணங் காண முடியாத ஒன்றையே விதி என்று கூறு கிறோம். விதி வலிதாயினும், அதனை எதிர்த்து மடிபவர் புகழுக்குரியர். வீழ்ச்சிக்கு முழுக் காரணமும் விதியே என்று கூறும் அவலத்தைக் காட்டிலும், தலைவனது செயற்கையாலேயே இம் முடிபு ஏற்படலாயிற்று என்று கூறும் அவலம் சிறந்தது. குருட்டு விதி முன்னே செல்லப் பின்னே செல்கிறான் கோவலன். செய்கிற செயலின் பயன் இதுவாகும் என்று தெரிந்து செய்பவனல்லன் அவன். அவன் வீழும் போது இரக்கம் ஒன்றுமே நம்மாட்டு நிகழ்கிறது. ஆனால், தான் செய்வது இன்னது என்று தெரிந்திருந்தும், அதன் பயன் எதுவாய் விளையும் என்று அறிந்திருந்தும், விதி வலிது' என்று அறிந்திருந்தும், தனது மனவலி ஒன்றையே துணையாகக் கொண்டு இறுதிவரைப் போராடி உயிர்விடும் வீரனே அவலத்தலைவன் ஆக எவ்வாற்றானும் தகுதி உடையவனாவான். இத்தகைய வீரர்களின் முடிவின் பிறகு, நம் மனத்தில் இரக்கத்தோடு கூடிய வியப்பும் தோன்று கிறது. அவன் எத்தகைய தவற்றைச் செய்து அதன் பயனாய் அழிந்திருப்பினும், நம் வியப்புக் குறைவதில்லை. ஒரு சிலர் கருதுகிறபடி இத் தண்டனை இவனுக்கு ஏற்றதுதான் என்ற எண்ணம் தோன்றுவ தில்லை. அவனுக்கு அழிவு ஏற்படுகிறவரை அவனுடைய தவறுகள் நம் மனத்தின் முன்னர்த் தெரிகின்றன.