பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் ஆனால், அவன் தவறுகளுக்குச் சாவாகிய முத்திரையை வைத்துவிட்ட பிறகு, நாம் அவன்மேல் காழ்ப்புக் கொள்ளுவதில்லை, தனது முடிவை அவன் வரவேற்கும் முறையில், நாம் நம்மையும் அறியாமல் அவன்பால் மரியாதை செலுத்துகிறோம். நம் மனத்தில் தோன்றும் இம் மரியாதை உணர்வும் ஒரு காரணத்தை உட்கொண்டே தோன்றுகிறது. அவனது வாழ்வில் பெற்ற தோல்வியின் சிகரமாகிய சாவிலே, அவன் பொலிவும், விளக்கமும் பெற்றுத் தோன்றுவதுபோல், அவன் வாழ்வில் எங்கும் பொலிவு பெறவில்லை என்ற எண்ணமே மேற்கூறிய உணர்விற்குக் காரணமாகிறது. இராவணனது வாழ்வின் பிற்பகுதி முழுவதிலும் அவன் பெற்ற தோல்விகளையே காண்கிறோம். எந்த நேரத்தில் சானகியை, அறம் துறந்து மனச் சிறையில் வைத்தானோ அந்த நேரத்தில் அவன் வாழ்வில் தோல்வி புகல் ஆயிற்று. அத் தோல்வியின் சிகரமாகிய அவனது சாவில் அவன் பொலிவும் விளக்கமும் பெற்றுவிட்டான் என்று ஆசிரியரே கூறுகிறார். 'மும்மடங்கு பொலிந்தன அம்முறை துறந்தான் உயிர் துறந்த முகங்கள். இவ்வரிகள் மேற்கூறிய கருத்தை வலியுறுத்தல் காண்க. நம்மையும் அறியாமல், அவன் மாட்டுக் கொண்ட மதிப்பும் பன்மடங்கு உயர்ந்து விடுகிறது. அவனது ஆன்ம உயர்வு நமக்கு அப்பொழுதுதான் புலப்படுகிறது. அவன் அடைந்த ‘சாவு இவ்வெண்ணங்களைப் போக்கடிக்காமல், அவை மிகுவதற்குத் துணை செய்கின்றன. அவன் சாவுக்குக் காரணமாவதற்குத் துணை செய்கின்றன. அவன் சாவுக்குக் காரணமாயிருந்தது, கேவலம் குருட்டு விதியன்று என்றும், கடவுள் தன்மை பெற்ற பொருளே என்றும் நாம் அறிகிறோம். கடவுள் தன்மை