உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் அவலங்களில் தீமைக்கும் நன்மைக்குமே போர் மூளுகிறது. உதாரணமாகப் பல நற்பண்புகளிலிருந்தும் 'பிறர் மனை நயத்தல்' என்னும் தீமை இராவணன் பால் குடிகொண்டது. இத்தீமையை அறிவுடைய அவனே போக்கிக் கொண்டிருக்கலாம். அன்றேல் பிறர் எடுத்துக் கூறியபொழுதேனும் திருந்தி இருக்கலாம். கரன் முதலியோர் பட்டபொழுதும், முதற்போர் புரிந்த பின்னரும், கும்பகருணன் குலைந்த பொழுதும், இந்திரசித்தன் இறந்தபொழுதும்கூட அவன் தன் தவற்றை உணர விரும்பவில்லை. வீடணன் சமயத்தில் எடுத்துக்காட்டிய பொருள் மிகச் சிறந்ததன்றோ! கோநகர் முழுவதும், நினது கொற்றமும், சானகி எனும்பெயர் உலகின் தம்மனை ஆனவள் கற்பினால், வெந்தது) அல்லது) ஒர் வானரம் சுட்டது'என்று உணர்தல் மாட்சியோ ? (கம்பன் - 6145) இவை யனைத்தையும் உணராது, தான் செய்வது தவறு என்று அறிந்திருந்தும் மேலும் விடாது தவற்றைச் செய்கின்ற தீமை தண்டிக்கப்பட வேண்டிய தொன்றன்றோ? தீமை அழிக்கப்படும்பொழுது, உடனி ருக்கும் நன்மையும் அழிவது வருந்தத்தக்கதே. இராவணன்பாலுள்ள வீரம், தவம் முதலியனவும் உடனழிந்தன. ஆனாலும், அவனது புகழ் நிலை பெறுதல் அவனது ஏனைய நற்பண்புகளின் பயனாம். அவலத்தைப்பற்றிய கருத்து வேறுபாடுகள் பல, அவற்றுள் ஒன்று இந்நூலுக்கு இன்றியமையாத தாகலின் அதை இங்குக் காண்போம். இராவணன் தீமையே வடிவானவன் என்றும், அவன் பெற்ற முடிவு அவனுக்குப் பொருத்தமானதே என்றும், தீமையே