36 இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் இக் கருத்தோடு மாறுபடுஞ் சிலர் நாம் இராவணன் அழிவிற்கு வருந்துவதில்லையென்று கூறித் தீயவனாகிய இராவணனை அழிக்க நன்மையே வடிவான இராமன் அடையும் துன்பமே நமது சோகத் திற்குக் காரணமென்பர். தசரதனை இழந்தது முதல் இராமன் அடையும் துன்பங்கட்கு நாம் வருந்து கிறோம். ஆனால், நன்மையே வடிவானவனாகக் கருதப்படும் இராமன் துயரிலும், தசரதன் அழிவிலும், பரதன் தவத்திலும், இலக்குவன் உறக்கம் இழந்த தன்மையிலும், சீதை வனம் புகுந்த செயலிலும் அவலம் பிறக்கிறது என்பது பொருந்தாக் கூற்றே. நன்மையின் அழிவில் அவலம் என்பதுண்மை. ஆனால், எந் நன்மையின் அழிவு குறிக்கப்படுகிறது? இராவண னுடைய நற்பண்புகளின் அழிவிலேதான் அவலம் பிறக்கிறது. கவிதைகளைப் படிப்போர்க்கு இக்கருத்து விளங்காமற் போகாது. நன்மைக்கும் தீமைக்கும் இடையே நடைபெறும் போராட்டத்தை அவலத்துள் 'ஹேகல் சேர்க்காததே இவர்கள் கூற்றுக்கு ஆதாரம்போலும், ஹேகலின் கருத்தையே ஒரு சிறிது ஆராய்வோம்; நன்மைக்கும் நன்மைக்கும் நடைபெறுகிற போராட்டத்தில் மட்டுமே சிறந்த குறிக்கோள் இருக்க முடியும் என்பதும், சமூக நன்மை கருதித் தனி மனிதன் அழிக்கப்பட்டால் அங்கே அவலம் தோன்றும் என்பதும் இவர்கள் முடிபாகும். ஆனால், இந் நிலையிலும் இதற்கு மறுதலையாய நன்மை தீமைப் போராட்டத்திலும் காணப்படும் உண்மைப்பொருள் ஒன்றே. முரண் ஏற்பட்ட பிறகு இரண்டு பக்கங் களிலும் அழிவு நடைபெறுகிறது. சக்தி, வன்மை, நன்மை என்றவற்றோடு ஆன்ம சக்தியும் அழிவுறு
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/55
Appearance