பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 ல் இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் படுகிறது. இந் நிலையில் ஒவ்வோர் ஆன்மாவையும் நாம் மதிக்கிறோம். அவற்றிலும் பண்பாடு பொருந்திய ஆன்மாவை மிகுதியும் மதிக்கிறோம். தான் பெற்ற பண்பாட்டிற்கேற்பவே ஒருவனை மகாத்மாவென்றும், மற்றொருவனை ஆன்மாவென்றும், வேறொருவனைத் துராத்மா என்றும் கூறுகிறோம். இத் தன்மைகொண்டு இராவணனைக் காண்போம். அவன் எத்தகையவன் என்பதை நூலில் பரக்கக் காணலாம். அவனுடைய பகைவர்களே அவனுடைய வீரத்தை வியக்கின்றனர். இந்திரப் பெரும் பதத்தை ஆட்சி செய்தது தாழ்ந்த மனோநிலை கொண்டமையால் அன்று. எனவே, இத்தகைய ஒருவன், தன்னம்பிக்கையே வடிவான ஒருவன், "என்னையே நோக்கி நான் இந் நெடும்பகை தேடிக்கொண்டேன்' என்று கூறும் ஒருவன், "நாசம் வந்துற்றகாலை நல்லதோர் பகையைப் பெற்றேன்" என்று கூறும் ஒருவன், தன்னோடு பொருகின்றவனை நோக்கி "இவனோதான் அவ்வேத முதற்காரணன்" என்று நினைத்த பின்னரும், "யாரேனும் தானாகுக யானென் தனியாண்மை பேரேன் நின்றே வென்றி முடிப்பன் புகழ்பெற்றேன்” என்று கூறிப் போர் செய்து உயிர் துறந்த ஒருவன் சாதாரணமானவனோ? இராவணனைப்பற்றிக் காணும்பொழுது நமது உளம் வருந்தவில்லையா? நன்மை என்பதும் தீமை என்பதும் ஒப்பு நோக்கிக் காணும் சொற்களே தவிர முழுப்பொருள் தருஞ் சொற்களல்ல. மேலே கூறிய இயல்புகள் இராவணனிடம் காணப்பட்ட ஆன்ம பலமும் நற்பண்புகளும் அல்லவா ? இவை நற்பண்புகள் அல்லவெனின் இவை போன்ற பண்புகள் உடைய இராமனை மட்டும் சிறந்தவன் என்று கூறுதல் எங்ங்னம்? இப் பண்புகளாலேயே நாம்