அவலம் , 39 கூறும் சாதாரணத் தீயவன் என்ற சொல்லால் அவனைக் குறித்தல்ாகாது என்று அறிகிறோம். அவ்வாறு கூறின் அஃது அவலமாக ஆகாது; இழவாகவே முடியும் என்பதும் நினைவிலிருத்த வேண்டுவதொன்று. இன்னும் ஒர் ஐயம் தோன்றியே தீரும். இராவண னிடத்து நன்மை என்பது இருந்திருக்குமானால், அதிலும் நாம் கூறுகிற அளவு இருந்திருக்குமேயானால் அஃது அவனது ஒரு தீமையைப் போக்கி இராதா? அவனது கல்வியும், தவமும், அனுபவமும், வீரமும், ஆண்மையும் இவ்வொரு தவற்றைப் போக்கவில்லை. எனில் அவற்றின் வன்மைதான் என்ன ? எண்ணிக்கையில் பலவாக இருப்பினும் அவை வலிமையிற் குறைந்தவை போலும்! இவ்வெண்ணங் களும் வினாக்களும் நியாயமானவையே! ஆனால், மனித மனத்தின் கூறுபாடுகளை ஆராய்வார்க்கு இதில் வியப்போ ஐயமோ தோன்றுவதில்லை. இப்பண்புகள் நிரம்பி இருக்கிற காரணத்தால் வேறு இயல்புகள் இருத்தல் கூடாது என்ற கட்டுப்பாடு மனிதனிடம் செல்லாது. இவை இரண்டும் தனித்தனி மனத்தில் தங்கிச் சமவலிமையோடு நிலைபெற்றிருக்கலாம். ஆனாலும் வியக்கத்தக்க ஒரு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இவ்விரண்டு பண்புகளுள் ஒன்று தலை தூக்கி நிற்கும் பொழுது அதன் மறு தலையான ஒன்று அதனை எதிர்த்துப் போராடாமல் அதற்குத் துணையாகவே நின்றுவிடுகிறது. தீமைக் குணம் மிகுந்த போது அறிவும் அதற்குத் துணை செய்கிறது. இராவணன் சீதையின் வருணனையைச் சூர்ப்பணகை பாற் கேட்டவுடனேயே அவளை
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/58
Appearance