40 ல் இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் இதயமாம் சிறையில் வைத்தான் என்று கூறப்படு கிறான். இந்நிலையில் அவனிடம் குடிப்புகுந்த இத்தீய பண்பு வளருவதற்கு உதவி செய்கின்றன, இவ்வெண்ணத்தைத் துண்டி அவளை எவ்வாற்றானும் அடைய வேண்டும் என்ற எண்ணத்தை அவன் பால் வளர்த்தவை அவனுடைய ஏனைய நற்பண்புகளேயாகும். அவனுடைய கல்வி யறிவு அவளைக் கற்பனை செய்யச் செய்தது. கர துடனர்கள் அழிந்தன ரென்றறிந்தும், இராமன் வலியை மதியாது மானிடன் என்று நினைக்கச் செய்தது அவனுடைய தவவலியும் ஆண்மையாகும். எனவே, இப்பண்புகள் தாங்கள் , செய்யவேண்டிய நற்செயல்களை விட்டு அவனுடைய தீய எண்ணத்திற்கே துணை நின்றன. அங்ங்னம் துணை நின்றமையால் அவற்றையும் தீயவை என்று தள்ளிவிடுதல் அறிவுடைமையாகாது. நாம் அவனை மதிக்குமாறு செய்பவை அப்பண்புகளே யாகும். இவ்வொரு தீய பண்பைத் தவிர ஏனைய நற்பண்புகளில் இராவணன் இராமனுக்குச் சிறிதும் குறைந்தவனல்லன். நற்பண்புகளே நிறைந்த இராமனும் தவறே செய்தறியாதவன் என்று கூறுவதற்கில்லை. மனைவியின் சொற்பொருட்டு மாயமான் பின் போதல் தகாது என்று கூறிய இளையோன் சொல்லைத் தட்டிச் சென்ற குற்றத்திலிருந்து, வாலியை மறைந்து நின்று கொன்ற குற்றம்வரை எத்தனையோ அவன் பாலும் ஏற்றிக் காணலாம். ஆனால், அவற்றிற் காக அவனைத் தவறு கூறுவாரில்லை. - அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும் பெண்ணேவல் செய்வார்கண் இல் (குறள் 909)
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/59
Appearance