அவலம் 41 என்பதனை மறந்ததால் இராமன் பட்ட இடுக்கண் கொஞ்சமன்று. ஆனாலும் இத்தவறுகள் பெருந் தவறுகள் அல்ல. அத் தவறுகளால் இராமனும் துன்ப மடைகிறான். இராமன் தவற்றைக் காட்டிலும் இராவணன் தவறு பன்மடங்கு பெரியது. எனவே, அவனுடைய உயிரைக் கொடுத்தே தவறுகட்குக் கழுவாய் தேடவேண்டி இருந்தது. பின்னர் இக்கருத்து விரித்துரைக்கப்படும். இதுகாறுங் கூறியவற்றான் இராவணன் தீமையே வடிவானவன் என்று நினைப்பது தவறு என்று புலப்படும். தீமை சிறிதும் நன்மை பெரிதுங் கலந்திருந் தமையாலும், அவன் தீமை வீழ்ச்சியடையும் பொழுது உடனிருந்த நன்மைகளும் அழிந்தமையாலும் அவன் வீழ்ச்சி அவலமாகக் கருதப்படுகிறதென்பதும். நன்கு விளங்கும். மேலும், அவலத்தின் முடிபுபற்றி ஒரு வார்த்தை கூற வேண்டும். பெரும்பாலும் அவலத்தின் முடிபு அமைதியைத் தரவேண்டும். அவலத் தலைவன் வீழ்ச்சியில் நாமும் வருந்துகிறோம். அவனுடைய முடிபு இரு பகுதிகளையுடையது. ஒன்றில், உண்மை இன்மையை உண்மை அழிக்கிறது. என்றைக்கும் உண்மை ஒப்பற்றதும் சிறந்ததுமாகலின் அது வென்றே திரும். ஆனால், இவ்வெற்றியின் பின்னர், ஓர் ஆறுதல் இருக்க வேண்டும். அஃதின்றேல் அவலம் நம் மனத்தில் தவறான எண்ணங்களை உண்டாக்கும், வெறுங் காழ்ப்பே மிஞ்சும், எனவே, இறந்த தலைவன் தண்டித்த தலைவனுடன் ஒன்றுபடும் பகுதியை அவலம் எடுத்துக் கூறுகிறது. எந்த ஒரு சக்தியால் இராவணன் துன்பமுற்றானோ அந்தச் சக்தியே
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/60
Appearance