அவலம் 43 கம்பனே இராவணன் மாட்டு மதிப்புக் கொண்டி ருந்தான் என்பதும் விளங்கும். இராவணனுடைய ஆட்சியின் மாட்சியைப் படலம் படலமாகக் கம்பநாடன் பாடியதன் கருத்தென்ன? வீடணன் முதலியோர் கூற்றாக அவனையும் அவனுடைய தவ வலிமையையும் புகழ்வது ஏற்றுக்கு? வான்மீகியோடு பல்லிடங்களிலும் மாறுபட்டது எற்றுக்கு? சீதையைப் பன்னசாலையோடு பெயர்த்து எடுத்துச் சென்றான் என்பதும், தனது உயிரினும் இனிய அசோகவனத்தை அழித்த குரங்கைக் கொல்க என்று கட்டளையிட்ட பின்னர், வீடணன் துதுவரைக் கொல்லற்க என்று கூறினானாக. உடனே அச்செயல் தவிர்ந்ததும் எத்தகைய பண்பைக் காட்டுகின்றன? இராவணனைத் தீயவன் என்று காட்ட வேண்டும் என்று கம்பன் கருதி இருப்பானே யாகில் இவற்றைப் பாடி இருக்க வேண்டாவே, அசோகவனத்தில் சிறை இருந்த சீதை பொறுக்கவியலாத முறையில் துாற்றியும் கோபமே உருவமான இராவணன் வாளாவிருந்து விட்டான் என்று பாடுவது எற்றுக்கு: மைந்தனை இழந்து ஆறாத் துயர்க் கடலில் மூழ்கிச் செய்வதின்னதென்று தெரியாத நிலையில் சீதையைக் கொல்லத் துணிந் தானாக, மகோதரன் உலகெலாம் உளதனையும் பெரும்பழி பிடித்தி போலாம், செய்யற்க என்று கூறவே, தனது செயலினின்றும் தவிர்ந்துவிட்டான். இங்ங்ணம் எத்தனையோ நற்பண்புகள் கூறப்படுகின்றன. கம்பநாடன் வான்மீகக் கதையைமட்டும் எடுத்துக் கொண்டானே தவிர, அதன் போக்கைத் தன் மனம் விரும்பியபடி மாற்றியமைத்துவிட்டான் என்பது யாவரும் அறிந்ததொன்று. அவ்வாறு அவன் மாறுதல் செய்வதற்குரிய காரணங்களும் உண்டு. கதைப்
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/62
Appearance