44 இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் போக்குப் பல இடங்களில் தமிழ் நாட்டார் மனப் பான்மைக்கு ஏற்றதாகவில்லை. எனவே, வேண்டுமான இடங்களிலெல்லாம் மாறுதல்கள் செய்துவிட்டான். அங்ங்னம் செய்த அவன் நாம் நினைப்பது போல, இராவணனை முழுத் தீயவன் என்று காட்ட விரும்பி இருந்தால் நன்றாகக் காட்டி இருக்கலாம். அங்ங்னம் அவன் செய்யவில்லை. அம்மட்டோ? பல இடங் களிலும் அவனது பெருமமை விரித்துக் கூறப்படுகிறது. இராமனுடைய பெருமையும் ஆற்றலும், புகழப்படுவது போலவே இராவணனுடைய புகழும் பெருமையும் கூறப்படுகின்றன. இராவணன் வீழ்ச்சிக்கு மிகுதியாகத் துயரமடைகிறவன் கம்பநாடனேயாகும்; இவ்வளவு ஆற்றலும் தவறான வழியிற் சென்று அழிகிறதே என்று வருந்துகிறான். பிறர்மனை நயக்கின்ற பேதைமையைத் தமிழர் பெரிதும் வெறுத்தனர். அத் தவற்றைச் செய்த இராவணனைக் கம்பன் மிகுதியும் வெறுக்கிறான். அங்ங்ணம் வெறுப்பதால் இராவணன் மாட்டுள்ள மற்ற சிறந்த பண்பாடுகளையும் வெறுக்கிறான் என்பது கருத்தன்று. இத்தவற்றுக்காக எவ்வளவு வெறுக் கிறானோ அவ்வளவு பிறபண்புகட்காக நேசிக்கிறான். இதனால் இரண்டையும் கூறிக் கொண்டே செல்கிறான். இராவணன் கொண்ட காமம் தவறான தாயினும், ஓர் அவலத் தலைவனுக்கு உள்ள முறையில், அக் காமம் மிக ஆழமாக உள்ளது என்பதையும், இராவணனுடைய ஏனைய நற்பண்புகளும் இத் தவற்றைப் பெரிதாக்கவே உதவுகின்றன என்பதும் விரித்துக்கூறுகிறான். மயிலிளஞ் சாயலாளை வஞ்சியா முன்னமே இதயமாஞ் சிறையில் வைத்தான் என்பதனால், இராவணன் வாழ்க்கையில் இடைப் பிறவரலாக இத் தவறு நிகழவில்லை என்றும் வேண்டுமென்றே தவறு என்று அறிந்திருந்தும் செய்தது என்றும் கூறுகிறான்.
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/63
Appearance