அவலம் 45 இதுகாறுங் கூறியவற்றான் ஒர் உண்மை புலப் பட்டே தீரும். அஃதாவது இராவணனைக் கம்பன் இழித்துப் பேசவில்லை என்பதாம். மேலும் மற்றொரு கருத்தும் காண்டற்குரியது. இராமாயணத்தைப் படிக்கும்பொழுது, அதனைப் பற்றி எழுதும்பொழுதும் ஒரே கருத்தோடே செய்கிறோம். இராமனும் இராவணனும் உண்மையாக வாழ்ந்தார்களா? இந் நூலில் கூறப்பட்டவை அனைத்தும் உண்மையா? இவ்வினாக்கள் நம் மனத்தில் தோன்றவேண்டிய இன்றியமையாமையே இல்லை. அந் நூலை இக்கருத் தோடும் படிக்கலாம். ஆனால், அதில் கம்பன் காட்டிய இராம, இராவணர்களைக் காணமுடியாது. நாம் விரும்பும் இராம இராவணர்களையே காண்டல் கூடும். மேலே கூறிய கருத்து மனத்தில் தோன்றிய வுடனேயே விருப்பு வெறுப்புகள் மனத்தில் முளைத்து விடுகின்றன. அவற்றிற்கு ஆளாகிவிட்ட நாம், நாம் விரும்பும் கருத்துகளை நூலில் ஏற்றிக் காண்போமே தவிர அவன் கூறுவனவற்றை அறிய முடியாதவர் களாகி விடுவோம். எனவே, இக் கருத்தை நீக்கி அதனை ஒரு காவியமாக நினைப்போமாக! காவியப் பண்புகள் நிறைந்த ஒரு காவியமாக நினைப்போமாக! காவியப் பண்புகள் நிறைந்த ஒரு நூலாகும் கம்ப ராமாயணம். அதில் காணப்படும் இராமன் முதல் யாவரும் கம்பன் பெற்ற பிள்ளைகளே ஆவர். அவனாகப்பெற்ற பிள்ளைகட்கு அவனே குணங்கள் கற்பிக்கிறான். அவனாக ஒருவனை அதிகம் விரும்பிப் புகழ்ந்து மற்றையோரை வெறுத்து இகழ்கிறான் என்று கூறுவோமேயாயின் தவறிழைத்தவர்களாக ஆவோம். காவியத்தைக் கற்பதால் விளையும் இன்பமும் நமக்கு இல்லாமற் போய்விடும். எனவே, விருப்பு வெறுப்பு
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/64
Appearance