பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூல் வழி இராவணன் போன்றவொரு சிறந்த தலைவனே அவலத் தலைவனாக இருக்க இயலும். இத் தலைவனைப்பற்றிப் பலவகையிலும் நாம் அறிய வேண்டுவது இன்றியமையாததாகின்றது. சில வழி துறைகள் வகுத்துக்கொள்வதன்மூலம் அவனை நாம் முற்றிலுங் காணக்கூடும். இராவணனைப்பற்றி ஏனைய பாத்திரங்களின் கருத்துகள் எவை எவை என்பதை முதலில் அறியவேண்டும். அவனைப் பற்றி அவன் தம்பி கும்ப கருணன், மைந்தன், மனைவி இவர் களுடைய கருத்துகள் முதலிற்காண்டற்குரியன. இவை அவன் உறவு கொண்டார் கூற்றுகள். இனி அடுத்துக் காணவேண்டுவன அவன் பகைவர்களாகிய வீடணன், இராம இலக்குவர், சடாயு, சுக்ரீவன், அனுமன், சீதை ஆகியோர் கருத்துகள். இவை எல்லாவற்றையும்விட அவனே தன்னைப்பற்றிச் சொல்லுக்கொள்ளும் கூற்றுகள். இவையெல்லாம் ஒருபுறமிருக்க, இவ்வனைவரையும் படைத்துப் பேசுமாறு செய்த கலைஞன் கூற்று. இம் முறையில் ஆராய்ந்து இராவணனை முழுவடிவம் பெற்ற ஒருவனாகக் காணவேண்டும். இத்தன்மை பெற்ற அவன் வீழ்ச்சிக்குரிய காரணத்தைப் பின்னர் ஆயவேண்டும். இம்முறையை அடிப்படையாகக் கொண்டு முதலில் இராவணன் மாட்சியைக் காண்போமாக.