இலங்கையின் மாட்சி 51 செய்த பிலம் போலவும், அகன்றும் உயர்ந்தும் காணப்படுகிறது. அவ்வகன்ற வாயிலிடத்துக் காவல் புரிகின்றனர் வீரர். ஆயிரக்கணக்கான கள்ளவினை வெவ்வலி யரக்கர்இரு கையும் முள்ளியிறும் வாளும்உற முன்னம்முறை நின்றார் (கம்பன் - 4902) என்று கூறுமுகத்தான், அக்காவலினது சிறப்பைக் கூறுகிறான் ஆசிரியன். துப்பாக்கியைத் தோள் மேலிட்டுத் துரங்கும் இற்றை நாளில், காவலர், அத்துப்பாக்கி இல் வழி வீரராகார். ஆனால், அவ்வரக்கர் ஆயுதமில்வழியும், வலியும், இரு கையும், பல்லும் ஆயுதங்களாகப் பயன்படுத்தும் தன்மை யுடையார் என்று கூறுகிறான் ஆசிரியன். இவ்வரும்பெரு மதிலை அடுத்து வளைந்து கிடப்பது அகழி. அதனுடைய ஆழத்தையும் அகலத்தையும் அளவிட்டுக் கூறுதலைக் காட்டிலும், உலகினை வளைத்துள்ள ஏழு கடல்களும் இராவணன் ஆணைக் கஞ்சி, அவனை நேரே காண வன்மையற்று, அவனது மதிலைச் சுற்றி உலாவி வருவன போன்றுள என்று கூறிவிடலாம். இராகவன் பெருமையை நன்கறிந்த அனுமனே, இலங்கையின் பாதுகாவலைக் கண்டபிறகு, "சேவகனும் யாமும் வெவ்வம்ர் தொடங்கிடின் என் ஆய் விளையும்! மேலும் கடலைக் கடப்பது அரிதன்று. அங்ங்னம் கடந்த பின்னர் இக்காவலைக் கடத்தல் அரிதாகவே முடியும். போரும் மூண்டுவிட்டதாயின், நெருங்கு அமர் கிடைக்கும் நெடுநாள்,' என்று நினைப்பானேயாகில், அந்நகரின் காவல் மிகுதியைப் பற்றிக் கூறவேண்டுவது என் உளது?
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/70
Appearance