52 இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் இத்தகைய சிறப்பு வாய்ந்த நகரில் வாழ்ந்தவர் எத்தகையர் என்பதைக் காணல் வேண்டும். மக்களைப் பொறுத்தே ஒரு நாட்டின் பெருமையும் சிறுமையும் ஏற்படுகின்றன என்பது தமிழருடைய கொள்கை யாகும். இது கருதிய ஒளவையார், நாட்டை நோக்கிக் கூறுகையில், "நிலனே, நீ நாடாக இருப்பினும் காடாக இருப்பினும், பள்ளமாக இருப்பினும் மேடாக இருப்பினும், அவற்றால் பெருமை சிறுமை அடைவதில்லை. யாண்டு நல்லார் உளரோ, ஆண்டே நீயும் நல்லை," என்று கூறிப் ப்ோந்தார். இலங்கை மாநகரம் இவ்வளவு சிறப்புடையதாயிருந்தும், அது சிறந்த தாகாது. முன்னர் நாட்டின் வளத்தை நோக்கி, "நரகம் ஒக்குமால் நன்னெடுந்துறக்கம் இந்நகர்க்கு" என்று கூறிய ஆசிரியன், அவ்வுமையையே மேலும் கூறிக் கொண்டு செல்கிறான். "செல்வம் மிகுந்த இலங்கை மாந்தர், நன்கு வாழத் தெரிந்தவர்; இன்பத்தை அனுபவிக்கத் தெரிந்தவர்; சிந்தையில் நிறைவோடு வாழ்ந்தனர்," என்றெல்லாம் ஆசிரியன் குறிக்கிறான். நாட்டின் உண்மை வளர்ச்சியைக் குறிக்க வல்லார் பெண்டிரே. பெண்டிர் நல்லவராயிராத நாட்டிலும் அவர்கள் அடிமைகளாயுள்ள நாட்டிலும் வீரம் முதலியன விளையா. எனவே, இலங்கை மாநகரப் பெண்டிர் இருந்த நிலையைக் காண்போம். அவர்கள் பேச்சை என்னென்று கூறுவது! குழலும், வீணையும், யாழுமென்று இணையன குழைய மழலை மென் மொழி பேசும் மடவார்களாம் அவர்கள். அவர்கட்கு ஏவல் செய்பவர் தேவமாதர்! இத்தகைய நிலையைப் பெற்ற அவரை என்னென்று புகழ்வது! "தவஞ் செய்த தவமே அவர்கள்,” என்று கூறி.
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/71
Appearance