இலங்கையின் மாட்சி 57 குறிக்கப்பட்டார் என்று எண்ணவேண்டா, அருட் செல்வமுடையாரும் அந்நாட்டில் வதிந்தனர் என்பதைத் தெரிவிக்கவே ஆசிரியன் இப்பாடலைக் கூறுகிறான். தினந்தோறும் அறமுறை வழுவாது காரியங்கள் செய்வதோடு நிற்க வில்லையாம் அவர்கள். நிறையும் ஞானத்து உத்தமர் என்று கூறின மையால், சிறந்த நல்ல ஞானத்தைத் தரக் கூடிய கல்வி கற்று. அக்கல்வியை ஏட்டளவில் நிறுத்தாமல் வாழ்க்கையிலும் வாழ்ந்து காட்டினர் என்பது கூறப்படுகிறது. 'நிறையும் ஞானத்து' என்றமையின் கல்வி மேம்பாடும், 'உத்தமர் என்றமையின் ஒழுக்க மேம்பாடும் கூறியவாறாயிற்று. இங்ங்ணம் உள்ள அவர்கள் தங்கள் நாட்டைவிட்டு ஓடிவிடாமல் அங்குத் தங்கித் தினப்படி காரியங்கள் செய்து கொண்டு வாழ்கிறார்கள் என்பது நித்த நியமத் தொழிலராய்' என்றதால் குறிக்கப்படுகிறது. இத்தகைய மக்கள் ஒரு கொடுங்கோலன் நாட்டில் வாழ முடியுமா? வாழத்தான் விரும்புவார்களா? ஒரு வேளை வாழ வேண்டிய இன்றியமையாமை ஏற்படினும், அவ்வாழ்க்கையை உதறித்தள்ள வழி தேடுவார்களேயன்றி, மகிழ்ச்சியோடு அங்குத் தங்கியிருப்பார்களா? அவர்கள் அங்ங்னம் மனம் ஒப்பியிருந்தார்கள் என்னும் கருத்துக் குறிப்பாக உணர்த்தப்படுகிறது, 'உத்தமர் உறங்கினர்; யோகியர் துயின்றார். உறக்கமும் துயிலும் மனவமைதி யுடையார்க்கு ஒல்லுமே தவிர, மனத்தில் மாறுபாடு கொண்டு நாட்டை விட்டுச் செல்லவேண்டும் என்று நினைப்பார்க்கு இயலாவாம். எனவே, இப்பாடலால் யோகியர் உத்தமர் ஆகிய அனைவரையும் ஆதரித்து வந்தனன் இராவணன் என்ற கருத்து அறிவுறுத்தப் படுகிறது.
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/76
Appearance