பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் இவ்வளவு விரிவாக இலங்கையையும், அதன் மக்களையும் அறிவதற்கு ஒரு காரணமுண்டு. இந்த அடிப்படையை நன்கறிந்த பின்னரே இராவணனைப் பற்றி நன்கு அறிய முடியும். இவ்வரிய பெரிய இலங்கையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவன் இராவணன் என்னும் தோன்றல்; புலத்தியன் மரபில் வந்தவன்; மூவுலகத்தையும் வென்று அடிப்படுத்துத் தனியாட்சி செய்தவன்; சிறந்த சிவபத்தன்; எல்லையில்லாத வரங் களையுடையவன்; தன் பெருமைக்கு ஏற்பப் பத்துத் தலைகளையும் இருபது கைகளையும் பெற்று வாழ்ந்தவன்; மூன்று கோடி வாணாளையும், முயன்று பெற்ற அரிய தவத்தையும், எவராலும் வெல்லப்பட மாட்டாய், என்று இறைவனாலே கொடுக்கப்பட்ட வரத்தையும் உடையவன்; திக்கயங்களைவென்று அவ்வெற்றியின் அறிகுறியாக அவற்றின் தந்தங்களை மார்பிலே தாங்கியவன். இராவணன் கேவலம் மிருக பலம் மட்டும் பொருந்தியவனல்லன், ஆன்ம வலிமையும் நிரம்பப் பெற்றவன். அவன் வன்மைகளையெல்லாம் பலபடி யாகக் சுவைத்துச் சுவைத்துப் பாடுகிறான் கம்பநாடன். முக்கோடி வாழ்நாளும் முயன்றுடைய பெருந்தவமும் முதல்வன் முன்நாள், "எக்கோடி யாராலும் வெலப்படாய்', எனக்கொடுத்த வரமும் ஏனைத் திக்கோடும் உலகனைத்தும் செருக்கடந்த புயவலியும் (கம்பன் - 9899)