இலங்கையின் மாட்சி ! 59 உடையவனாம் அவன். இப்பாடலில்தான் எவ்வளவு சொல்லழகும், பொருளழகும், பொதியப் பட்டிருக்கின்றன! நாளென ஒன்றுபோற் காட்டி உயிரீரும் வாள் அஃதுணர்வார்ப் பெறின் (குறள், 334) என்று கூறினார் ஆசிரியர் வள்ளுவப் பெருந்தகையார். அத்தகைய வாழ்நாளில் மூன்று கோடியை உடையவன் இராவணன், அம்மட்டோ? தவமுடையவன் இராவணன். எத்துணைத் தவம்? பெருந்தவமாம்! அப்பெருந்தவந்தானும் எவ்வாறு கிடைத்தது? முயன்று பெற்ற பெருந்தவம். எனவே, தன் முயற்சியாலேயே பெற்ற அது மிகுதியுஞ் சிறப்புடையது. பிறர் செய்த தவப்பயனைச் சிலர் அனுபவித்தலுமுண்டு. அவ்வாறாயின், அதனை அனுபவிப்பானுக்குச் சிறப்பொன்றுமில்லை. மேலும், சிலர் தவப்பயனை அனுபவிக்கலாம். அத்தவம் முடிந்த பிறகு அவதியில் விழுவது திண்ணம். ஆனால், இராவணன் தவம், அவன் வாணாள் முடியவிருந்து அவனுக்குதவிற்று. அக்கருத்துக்கள் எல்லாமடங்க, 'முயன்று உடைய பெருந்தவம் என்று குறிப்பிடுகிறான் ஆசிரியன். வரம் பெற்றிருப்பினும் அவ்வரத்தைத் தந்தாரினும் மேம்பட்டாரிடத்து அவ்வரம் பயனின்றாய் முடியும். அது கருதியே வரம் தந்தவன் 'முதல்வன்' என்றான். அவன்றானும் புதிதாய்த் தந்த வரமன்று. நன்கு பயின்று பார்த்துப் பயனுடையது என்று காணுமாறு முன்னரே தந்தது என்று கூறுவான் போல முன்னாள் என்றான். இராமன் கையால் மாண்ட அவனுக்கு வரந்தான் பொய்த்து விட்டதோ' என்று ஐயுறுவாரைத் தெளிவிப்பதற்காகவே,
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/78
Appearance