‘தீயினை நயந்தான் 83 சூழ்ந்துவிட்டான்! சாதாரணக் குடியிற் பிறந்தவனே இத்தகைய தவற்றைச் செய்யின் உலகம் பழிக்கும். நான்முகன் முதலாக வருகின்ற உயர் குடியிற் பிறந்த ஒருவன் செய்யின், அக்குற்றம் மிகப்பெரிதாகவன்றோ மதிக்கப் பெறும்! - குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின் மதிக்கண் மறுப்போல் உயர்ந்து. (குறள், 657) எனவே, இராவணன் செய்த இக்குற்றம் மிகப் பெரியது என்பதைக் கும்பகருணன் நன்கு எடுத்துக் காட்டு கிறான். அம்மட்டோ? அடுத்தபடியாக, இராவணனது கல்வியறிவைப் புகழ்கிறான் கும்பகருணன். சாமவேதம் பாடும் இராவணனது கல்வி எத்தகையது? மிகப் பரந்தும் ஆழ்ந்தும் உள்ளது; ஆயிரம் மறைப் பொருளைக் கண்டது. கேவலம், மறையை அப்படியே உருச்செய்து ஒப்பிப்பவன் அல்லன் இராவணன் மறையின் பொருளையும் நன்கறிந்தவன் அவன்; ஏனையோர் போல மிகுதியும் கற்று, கற்றதை வெற்று ஏட்டுக் கல்வி யாகக் கொண்டிருப்பவனல்லனே! எனவே, மறைப் பொருளை அறிந்து' என்று கவிஞன் கூறாமல், வேண்டுமென்ற பிறிதொரு சொல்லைப் பயன்படுத்து கிறான். அறிதல், தெரிதல், விளங்கிக் கொள்ளுதல், உணர்தல் என்ற சொற்களை நாம் இன்று ஒரே கருத்தில் பயன்படுத்தினும், அவை வெவ்வேறான பொருட் சிறப்புடையவை. அறிதல் அறிவு மாத்திரையாய் நின்று அடங்குவது. அறிவால் அறிந்த ஒன்றை வாழ்க்கையில் நடைமுறையில் கொணர வேண்டும் என்ற இன்றியமையாமை இல்லை. ஆனால், இ.மா.வீ.-6
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/82
Appearance