உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'தீயினை நயந்தான் 65 கூறப்படுகிறது. அறிவு அமைதலுக்கு உணர்தல் இன்றியமையாததாகலின், அது முன்னர்க் கூறப் பட்டது. இச்சொல்லுக்கு இதுவே பொருள் என்பது பின் வரும் சான்றால் வலியுறுத்தப்படும். பாண்டவர் சூதாட்டத்தைப் பாட வருகிறார் நம் காலக் கவிஞராகிய பாரதியார். எல்லாவற்றையும் பணயமாக வைத்துத் தருமன் இழந்து விட்டான்; இறுதியாக நாட்டையும் வைத்திழந்து விட்டான். இதனைப் பாடுகிற கவிஞருக்கு, இச்செயல் தீராத வருத்தத்தை உண்டாக்குகிறது. உடனே இக்காரி யத்தைச் செய்து தருமனைக் கவிஞர் தம் கற்பனைக் கண்ணால் பார்க்கிறார்; "ஆகா! தருமனா இக்காரியஞ் செய்தான்! கல்வி கேள்விகளிற் சிறந்த தருமனா இக் காரியஞ் செய்தான்! தான் வைத்துக் காக்க வேண்டிய அடைக்கலப் பொருளாகிய நாட்டை, மக்கள் வாழ்கிற நாட்டை, ஆடுமாடுகளையும் உயிரில்லாப் பொருள் களையும் பணயம் வைத்து ஆடுவது போல ஆடிவிட்டானே! என் செய்வது!" என்று இவ்விதம் நினைந்தவுடன் கற்பனையூற்றுத் திறக்கிறது. கவிஞர் பாடுகிறார்: கோயிற் பூசைசெய்வோர் - சிலையைக் கொண்டு விற்றல்போலும் வாயிற் காத்துநிற்போன் - வீட்டை வைத்து இழத்தல்போலும் ஆயி ரங்களான - அவை உணர்ந்த தருமன் தேயம் வைத்திழந்தான் - சிச்சீ! சிறியர் செய்கை செய்தான் ! இவ்விடத்தில் உணர்ந்த' என்ற இச்சொல்லின் பொருள் நன்கு விளங்குதல் காண்க. நீதி அறிதல்