68 இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் இராவணனுக்குப் புகழ்மேலிருந்த காதலை நன்கு அறிந்த கும்பகருணன், மீண்டும் மீண்டும் அதனையே சுட்டிக் காட்டுகிறான்; தருக்க முறைப்படியும், தவறு செய்தவன் புகழை அடைதல் இயலாத காரியம் என்பதை எடுத்துக் காட்டுகிறான். அண்ணன் செய்த செயல் குலத்திற்கே இழிதகைமை தேடிற்றென்ற வருத்தம் கும்ப கருணனுக்கு எல்லையற்று இருந்தது. அவன் மீண்டும் மீண்டும் அதனையே குறிக்கின்றான்; "சிட்டர் செயல் செய்திலை குலச்சிறுமை செய்தாய்!” என்கிறான். கும்பகருணன் தமையனுக்கு உறும் பழியை எடுத்துக் கூறினான்; பிறகு குலத்திற்கே தீங்கும் பழியும் விளையும் என்று எடுத்துக் காட்டினான். ஒருவேளை இராவணன் நிலைமை மாறிப் புகழையும் சட்டை செய்யாது இருந்து விடலாமல்லவா? மேலும், குடிக்கு வருகின்ற பழியைக்கூடச் சட்டை செய்யாதிருந்து விடலாம். காரணம், மனித மனம் பன்னெடுங் காலம் ஒன்றைப்பற்றி நிற்பதில்லை. எல்லையற்ற புகழைப் பெற்றுவிட்டமையின் இனிப் புகழுக்கு இடமில்லை யாதலின், பழி வரினும் வருக!' என்று நினைத்து விடலாமல்லவா? எனவே, இறுதியாக வேறு ஒரு கருத்தைக் கொண்டு வருகிறான். இதுவும். இராவணனை நன்கு தெரிந்துகொண்டமையின் அவன் செய்கிற இறுதி உபாயமாகும். எள்ளி நகையாடும் முகமாக, ஒவ்வாத இரு பொருள்களைச் சேர்த்துச் சொல்கிறான், இராவணன், மானத்தோடு வாழ வேண்டுமென்று பெரிதும் விழைகிறவன் என்பதை அறிகிறோம், மானம் இழந்து உயிர் வாழ்வதை எந்த வீரனும் விரும்பான் ஏன்? சாதாரண
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/87
Appearance