உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் எண்ணம் நிறைவேறாது என்று கண்ட பின்னருங்கூட அவன் போர் செய்து மாய்தலே தக்கதும் புகழும் ஆகும் என்று நினைக்கிறான்; எனவே, அவனது சீரிய பண்பில் ஐயப்படுவதற்கு ஒன்றும் இல்லை. இனி, இறுதியாகப் போர் மூண்டுவிடுகிறது. கும்ப கருணனை எழுப்பிக்கொணர்ந்து போர்க் கோலம் பூணுகிறார்கள். மீண்டும் கும்ப கருணன் தன் அண்ணனிடம் முறையிடுகிறான். ஆனால், இப்பொழுது பேசுகிற கும்பகருணன் மந்திரப் படலத்திற் கண்ட கும்பகருணன் அல்லன். எதிர் பாராத முறையில் போர் மூண்டுவிட்டது. இப்பொழுது அதைத் தடுக்க அவன் முயல்கிறான்; தடுத்தாவது பழி வராமற் காக்கவே முயல்கிறான்: சானகி துயர் இனம் தவிர்ந்த தில்லையோ ! வானமும் வையமும் வளர்ந்த வான்புகழ் போனதோ! (கம்பன் - 7350) என்றே வருந்துகிறான்; மீண்டும் தமையனை நோக்கு கிறான்; தமையன் செய்த ஒன்றுக்கு மேற்பட்ட தவறுகள் நினைவுக்கு வருகின்றன. இப்பொழுது இராவணன் செய்த பெருந் தவறு உலகம் தோன்றிய நாளிலிருந்து பெரு வீரர்கள் செய்த தவறுதான். அத்தகைய தவற்றினால் எத்தனையோ சாம்ராச்சி யங்கள் அழிந்தொழிந்தன. அப்பெருந் தவற்றை இராவணனும் செய்துவிட்டான்; ஆய்ந்தோய்ந்து பாராமலே செய்துவிட்டான்; இப்பொழுதுகூடக் கூடுமாயின் அதிலிருந்து விடுதலை பெறலாம்; ஆனால், வெளிவராவிடின் குலமுழுதும் ஒருங்கழிந்து விடுமே என்று அஞ்சுகிறான். அப்பெருந் தவறு தான்