'தீயினை நயந்தான் 71 யாது? பகைவன் வலி எத்தகையது என்றறியாது போரை வலுவில் வரவழைத்துக்கொண்டமையே. போர் முறை தெரிந்த வீரனா இராவணன்? வலியறிதல் என்ற துறையையே அவன் கற்கவில்லையா? வினைவலியுந் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியுந் தூக்கிச் செயல். (குறள், 471) என்ற கருத்தை அறவே மறந்துவிட்டான். வாலிபால் தோற்றமையையும், கார்த்தவீரியன்பால் தோற்றமை யையும் மறந்துவிட்டானா? அத்தகைய வாலியைக் கொன்ற அம்பு இராமன்மாட்டு இன்னும் இருக்கின்றதே! காற்றின் உதவியால் கடலைக் கடந்த குரங்கு இன்னும் அவன்பால் உள்ளதே! மாற்றான் வலியை இராவணன் ஆணவத்தால் நன்கு தெரிந்து கொள்ளவில்லை. கும்பகருணன் அதனை எடுத்துக் கூறுகிறான். - காலினின் கருங்கடல் கடந்த காற்றது போல்வன் குரங்குள; சீதை போகிலள்; வாலியை உரங்கிழித் தேக வல்லன. கோலுள; யாமுளேம் குறையுண்டாகுமோ? (கம்பன் - 7357) பகைவன் பலத்தை நான்கு அறியாத பெருங்குற்றம் இழைத்து விட்டான் இராவணன். அம்மட்டோ? துணைவலியும் ஆராய வேண்டாவா? "கொடுத்தனை இந்திரற்குக் குலமும் கொற்றமும்," என்றமையான், இனி அவர்கள் துணை இல்லை என்பதை எடுத்துக் காட்டினான்.
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/90
Appearance