'தீயினை நயந்தான் 73 என்றும் எடுத்துக்கூறினான். இவற்றாலெல்லாம் இராவணன் அறிவு பெறவில்லை; தன்பாலுள்ள நம்பிக்கையால் கும்பகருணனை இழித்துப் பேசி மனம் வருந்துமாறு கூறினான். இறுதியாகக் கும்பகருணன் மீண்டும் கூறலுற்றான். இராவணன் கொண்ட செருக்கிற்கும் அவன் இப்பொழுது செய்யும் தவற்றிற்கும் காரணம், அவன் தனது பலத்தின் மேலும், இந்திரன் பகைஞனாம் இந்திரசித்தன் வன்மையின் மாட்டும் கொண்டுள்ள நம்பிக்கைதானே! அதனையும் தகர்க்கிறான் கும்பகருணன். இந்திரசித்தன் மேல் இராவணன் கொண்டுள்ள நம்பிக்கைதான் எவ்வளவு! ஆம். அவ்வளவிற்கும் தகுதியானவன்தான் மைந்தன். ஆனாலும், என்ன? பகைவரை நன்கு உணரவில்லை. இவனைக் கொல்வதற்காகவே இலக்குவன் காத்துக் கொண்டிருக்கிறானே! இராவணன் அதனை அறிந்தானில்லை. எனவே, தம்பி ஆணையிட்டுக் கூறுகிறான். "இந்திரன் பகைஞனும் இராமன் தம்பி கை மந்திர வலியினால் மடிதல் வாய்மையால்.” ஒரு வேளை அவ்வாறு நேர்ந்தாலும் நேரலாம். இருப்பினும் என்ன? தன்மேல்தான் கொண்டுள்ள நம்பிக்கையைத் தகர்க்க முடியாதே! எனவே, அதற்கும் விடையாக, 'என்னைவென்று உளரெனில் இலங்கை காவல், நின்னை வென்று உயருதல் உண்மை, என்றும் கூறிவிட்டான். என்ன! இவ்வளவு கூறியும் அவ்இராவணன் கேட்கவில்லையே! சமபலம் உடையவனும், சிறந்த போர் வீரனும் ஆகிய தம்பியே இங்ங்னம் கூறிய பிறகும் ஒருவன் கேட்கவில்லை. அதினும் கற்றறிவும் கேள்வியறிவும் உடையவனும், சிறந்த கலையறிவு படைத்தவனும் ஆகிய இராவணனே கேட்கவில்லை என்றால், இதனை
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/92
Appearance