76 இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் தன் முன்னவன் எதிரே நின்று இத்தனை அறிவுரைகள் எடுத்துக் கூறிப் போரை நிறுத்துமாறு வற்புறுத்திய கும்பகருணன், வீடணனைக் களத்தில் கண்டவுடன் மாறிவிடுகிறான். அண்ணன் மாட்டு அவன் கொண்டுள்ள ஆராக்காதலை வெளியிடும் சந்தர்ப்பம் அப்பொழுதன்றோ வாய்க்கிறது? "வீடனா, தம்பியர் இன்றி மாண்டு கிடப்பனோ தமையன் மண்மேல் ?' என்ற கூறுகையிற்றான் அத்தகைய அன்பு வெளிப்படுகிறது. கும்பகருணன் கைகளிரண்டும் அறுபட்டுக் களத்தில் கிடக்கையிற்றான், தான் எவ்வளவு துரம் இராவணனை அறிந்திருக்கிறான் என்பதை வெளிப்படுத்துகிறான்; யாவரும் தொலைதல் உறுதி என்பது புலப்பட்டுவிட்டது, வீடணனாவது மிஞ்ச வேண்டும் என்ற அவாக் கொண்டான்; அவன்ைக் காப்பாற்ற வேண்டும் என்று இராமனிடம் கூறுமுகமாக மீண்டும் அண்ணனை நினைக்கிறான். உண்மையாகவே இராமன் போரில் வெற்றி பெறத் துணையாய் நின்றவன் வீடணன். இவன் தனக்கு உட்பகையாய் இருக்கிறான் என்பதை இராவணன் நன்கறிவான். வெற்றியை விரும்பும் அவன் இவனைப் போன்ற உட்பகையைச் சகித்துக்கொண்டிருத்தல் இயலாதன்றோ! எனவே, இவனைக் காணிற் கொல்வான். - தம்பிஎன நினைந்துஇரங்கித் தவிரான்அத் தகவில்லான் நம்பிஇவன் தனைக்கானில் கொல்லும் இறை நல்கானால். . (கம்பன் - 7627) இங்குத்தான் முதன் முறையாக இராவணனைக் கும்ப கருணன் தகவில்லன் என்று கூறுகிறான். இதுவரை
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/95
Appearance