78 இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் எத்தகையன? என்பவற்றைக் கண்டோம். இனி அடுத்து அருமை மைந்தனாகிய மேகநாதன் பழகிய இராவணன் எத்தகையவன் என்று காண்போம். 3. குலஞ்செய்த பாவத்தாலே கொடும்பழி தேடிக் கொண்டான்' 'வில்லாளரை எண்ணில் விரற்கு முன்னிற்கும் வீரன்; என்பதே கம்பநாடன் இந்திரசித்தனைக் குறிக்கும் சிறந்த முறை. இந்திரசித்தன் சிறந்த வீரன்; ஆனால், தந்தைக்கு ஏற்ற மகன்; தந்தையை ஒத்த வீரம், வலிமை, திடம் முதலிவற்றையுடையவன்; மேலும், தந்தையின் குணங்கள் பலவற்றையும் கொண்டவன். அவனது அகங்காரம் தந்தையின் அகங்காரத்துக்குச் சற்றுங் குறைந்ததன்று. தந்தை செய்த பெருந் தவற்றையே அவனும் செய்தான். அஃதாவது பகைவரது வன்மையைக் குறைத்து நினைக்கும் தவறாகும். இத்தவற்றை அவன் விரைவில் உணர்ந்தானாயினும், போக்கிக்கொள்ள வகை யில்லாது போயிற்று. மந்திரப் படலத்தில் அவனும் காட்சியளிக் கிறான். பகைவர்களைப்பற்றி ஒருவருக்கும் ஆண்டு ஒன்றுந் தெரியாது. வீடணன் ஒருவனே தெரிந்தவன். அவன் தெரிந்துகொண்டிருக்க இன்றியமையாமையும் இருந்தது. ஏனையோர் அனைவரும் - சேனைத் தலைவர் முதல் மேகநாதன் ஈறாக - இராம இலக்குவர் களைக் குறைத்தே மதித்தனர்; அளவுக்கு விஞ்சியதும் துன்பத்தை விளைக்கவல்லதுமான தன்னம்
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/97
Appearance