பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'குலஞ்செய்த ... ... ... தேடிக் கொண்டான் & 79 பிக்கையால் இத்தவற்றைச் செய்தனர். இது வரை வெற்றியைத் தவிர வேறொன்றும் காணாதவர் களாதலின், தங்களைப்பற்றி மிகுதியாக நினைத்துக் கொண்டது இயற்கையே. அறிவு முதிர்ந்த அனுபவம் மிகுந்த சேனாதிபதிகளும் இன்றும் இத்தவற்றைச் செய்கின்றார்கள். நம் கண்முன் நடந்த இரண்டாம் உலகப் போரில் இரஷ்யர்களின் வன்மையைக் குறைத்துக் கணக்கிட்ட ஜெர்மானியர் பட்ட பாட்டை நாம் அறிவோம். எனவே, பகைவனைக் குறைத்து மதித்தலினும் தவறு வேறு ஒன்றும் இல்லை, இந்திரசித்தன் கூறுகிறான். யானைஇலர்; தேர்புரவி யாதுமிலர்; ஏவும் தானைஇலர்; நின்றதவம் ஒன்றுமிலர், தாமோர் கூனல்முது கின்சிறு குரங்குகொடு வெல்வார் ஆனவரு மானுடர், நம் ஆண்மையினிது அன்றோ ! (கம்பன் - 6133) இதனைச் செவி மடுத்த தந்தை அவனது கருத்துத் தவறானது என்று இடித்துக் கூறினானோ? அதுதான் இல்லை. பீலிபெய் சாகாடும் அச்சுஇறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின் - (குறள் 475) என்ற குறட்கருத்து அவ்வீரர்கட்குத் தோன்றாதது பெருவியப்பே தந்தைமாட்டும் உடன் பிறந்தார் மாட்டும் எல்லையற்ற காதல் உடைய்னாயிருந்தான் மேகநாதன்; அக்காதல் மிகுதியால் சில சந்தர்ப்பங்களில் எல்லை யற்றும் சென்றிருக்கிறான். அதிகாயன் என்ற அரிய இ.மா.வி.-7