80 இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் தம்பி இலக்குவன் அம்பால் உயிர் நீந்தான் என்ற செய்தியைத் தந்தையே மைந்தனாம் மேக நாதனுக்குக் கூறினான். அந்நிலையில் மேகநாதன் யாது கூறு கிறான்? வருத்தி நிற்கும் தந்தையை மேலும் பழிக்கின்றான். கொன்றார் அவரோ ? கொலைசூழ்க எனநீ கொடுத்தாய் ! (கம்பன் - 8008) என்று இம்மட்டோடு நிறுத்தினானா? சாம வேதம் பாடிய தந்தையை - "ஆயிர மறைப்பொருள் உணர்ந்து அறிவமைந்தான் என்று கும்பகருணனால் புகழப் பட்ட தந்தையை - 'அறிவற்றவனே என்றும் இழித்துரைக்கிறான். அகூடிய குமரன் அழிந்தமையை இப்போது மீண்டும் நினைத்துக் கொண்ட இந்திரசித்தன், அவனை ஆராயாது போருக்கனுப்பின தந்தையை ஏசுகிறான். அக்கப் பெயரோனை நிலத்தொடு அரைத்து ளானை விக்கற் பொருவெவ் உரைத் தூதுவன் என்று விட்டாய் புக்கத் தலைப் பெய்தல் நினைந்திலை புத்தி இல்லாய் ! மக்கள் துணைஅற்றனை இற்றதுன் வாழ்க்கை மன்னோ ! (கம்பன் - 8009) இவ்வளவு தூரம் பேசிய மைந்தனைத் தந்தை ஒன்றும் தண்டித்தானில்லை. அதுவே இராவணன் மாட்டுக் காணப்படுகிற பெருந்தன்மை. மைந்தன் இழித் துரைத்தலில் அவன் தன் கருத்தைச் செலுத்தவில்லை. அங்ங்னம் கூறக் காரணமாயிருந்த அவன் சோதர அன்பை நினைந்து வாளா இருந்து விட்டான் போலும்! - அடுத்தபடியாகத் தந்தையும் மைந்தனும் சந்திக் கின்ற நிலை, மேகநாதன் நாக பாசத்தால் இலக்குவன்
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/99
Appearance