பக்கம்:இராவண காவியம்.pdf/147

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


91. என்று தேற்றித் தமிழ்நாட னினியா டன்னைத் தன்னாயம் சென்று கூடச் செலவிட்டுச் செல்லும் முள்ளக் தனையுரனால் ஒன்று கூட்டித் தன் கண்ணை யொல்லுந் துணையா வுடன்கூட்டிச் சென்று கூடச் செலவிட்டுச் சென்றாள் காண நின்றானே. வேறு 92. அன்னவ ளாயஞ்சேர்ந் தாடல் கண்டுமே தன்னிரு கண்களும் தமிய ராய்வரப் பொன்னியல் பாவையைப் புலம்ப விட்டுநீர் இன்னண மெதற்குவந் தீரென் பேசினான். 93. ஏசிய பின்னவ னிரக்கங் காட்டியே பாசிழை நிலைமையைப் பார்த்து வந்து பின் ஊசலா டியவுள மொடுக்கிக் கொண்டுதான் நேசர்கள் தங்கிய நிலையை யெய்தினான். 94, அற்றைநாட் போலவே யலங்கல் மார்பனும் மற்றைநா ளும்பசு மயிலை முற்றைநாள் பெற்றவுப் பொழிலிடைப் பெற்று மற்றுமப் பொற்றொடி யோடுவப் புணர்ச்சி யுற்றனன். 95. உண்ணிய பெருமையோ டுரன் கொள் நம்பியும் அண்ணிய மடம்பயிர்ப் பச்சம் நாணமென் றெண்ணிய பெருங்குணத் தியன்ற நங்கையும் கண் ணிய படி யுளங் கலந்தொன் றனர். 91, ஆயம்- ேதா ழியர் கூட்டம். உரன் -கடைப்பிடி, அடக் கம், கலங்காது துணி தல் முதலியவலி. கண்ணைக் கூட்டிச் செல்லும்படி அவட்குத் துணை யாகி விட்டா னென் க. ஒல்லும்-பொருந்திய. 92, தமி- தனி, புலம்ப-தனியாக. 94. உளப்புணர்ச்சி - மெய்யுற்றுப் புணராது உள் ள த்தே காதலன்பு கொள்ளு தல். இது, இடந்தலைப்பாடு.