5. திருமணப் படலம்
1. பொருவரு மொப்பின் மிக்க பூவையும் போர்வல் லானும்
ஒருவரை யொருவர் கண்ணுற் றுளந்தரு காத லாலே
திருமிகு மாயோன் செல்வி செய்தியை இனிது
சொன் னாம்:
மருவிய காத லாரின் மணவினைச் சிறப்பைச் சொல்வாம்.
2. புனை மலர்ப் பூங்கொம் பென்னப் பொன்னியல் பாவை
யென்ன
வனையுமோ வியமே யென்ன வளர்மகள் மணத்தை
யுன்னிப்
பனையிடைத் தோன்றும் வம்புப் பாளைபோற் பருவ
மன்றி
மனை யிடைப் பெயர் மாயோன் மனக்கொடு பெயர
லானான்.
3. பாடியைக் கலைத்து முல்லைப் படைகளைத் திரட்டி
யின்பங்
கூடிய வுறவி னோடுங் கொழுந்தமிழ்க் குடிக ளோடும்
பீடுயர் அருவிக் குன்றம் பின்ன தா முன் ன தாகம்
ஆடுநீள் கொடிமா டஞ்சூழ் அணிமிகு முத்திரை புக்கான்.
4. புக்கவ ன.றிவுங் கேண்மைப் பொறுப்புகல் விருப்புஞ் .
தொக்கால் லமைச்ச ரோடு சூழ்ந்துநன் மணத்துக்
கேற்ற
தக்கநன் னாளைத் தேர்ந்து தமிழ்மரு மகனோ டான்ற
ஒக்கலோ டுரியோர்க் கெல்லா மொலையும் போக்கி னானே.
5. போக்கிய பின் ன ரந்தப் டொருவ று முதிரைக் கொனும்
ஆக்கியா வனவே யெல்லா மயலவ ரவா வற் கேற்பத்
தேக்கிய செல்வந் தங்கும் திருநக ரணிழி னென்று
மாக்களி றதன் மே லாணை மணிமுரசறைவித் தானே.
முரசொலி யதுகேட் டந்த முதிரைமா மக்க ளெல்லாம்
விரைசெயும் பொருளாற் பூவான் மிளிர்மணி
யொடுசெம் பொன்னால்
உரசுபொற் சுண் ணந் தன்னா லொப்பனை செய்தார் )
தங்கள்
அரசியின் மணமே யென்றா லணிவியா ரெவர்தா னம்மா.
39, வமபுப்பாளை -காலமல்லாக் காலத்தில் தோன்றும் பாளை.
8. உரகதல்-பூசுதல்.
சேரத்
பக்கம்:இராவண காவியம்.pdf/161
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
