பக்கம்:இராவண காவியம்.pdf/203

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


3. விந்தக் காண்டம். 1. விந்தப் படலம் வேறு 1. அரசரும் புலவரு மமைச்சு மண் ணலும் அரசிய லாய்ந்தத ன மைவு கண்டனம்; உரைசெயு மிக்கதைக் குறையு ளாகிய விரைசெறி மரமடர் விந்தங் காணுவாம். மல்லலந் திராவிட வடக்குப் பாங்கரில் வல்லமர் விந்தமா மலைத்தென் சாரலில் வல்லியு மரங்களு மாவும் 1 ட்களும் புல்லிய பெருநிலம் பொருப்பி னின்றது. 3. முல்லையுங் குறிஞ்சியு முறைமை தப்பியே புல்லியே யிருமையைப் போக்கி யொன்றென எல்லியின் பகையதா யிருளின் சேக்கையாய் அல்லவர் மனமென வமைந்திருந்தது. 4. சந்தன மரங்களுந் தழைத்த வேங்கையும் கொந்தலர் செடிகளும் கொடியு மாம்பலும் பொந்துறு புதர்களும் புல்லும் புல்லியே விந்தமு மணமலி விந்தம் போலுமே. 5. இலையெனுங் குழலிடை யிணரைத் தாங்கியே அலையரு விகளெ னு மாடை பொத்தியே மலையகற் சுனை மலர் மலர்ந்து நோக்குற மலைமகள் நிற்பபோல் வயங்கு மாயிடை. 1, விரை-மணம். 2, மல்-வளம். வல்-வலி, மேடு. வல்லி-கொடி.. பொருப்பின்-மலைபோல, 3, எல்லி-சூரியன், பகல். அல்லவர் -வஞ்சர். 4, ஆம்பல்-மூங்கில், விந்தம்-சாடு. 5. இணர்-பூங்கொத்து, வயங்கும்-விளங்கும்,