தயப் படலம்
தருவளரு மிடைவளத்தைக் காப்புடையீ
ராயமர்ந்து தமிழ்வாழ் மக்கட்
கொருகுறையு மில்லாமல் ஆரியர் கொன்
றுண்ணாம மொழிப்பீ ரென் றாள்.
94. அரசிதிரு மொழிப்படியே யாங்காங்கே
யருங்காவ லமைத்தே யன்னார்
கரிசனமா யிருந்துகொலை புரியாது
மவர்சோமக் கள்ளுண் ணாதும்
வரிசையுட னேகாத்து வருகையிலே
தமிழர்பகை வாங்கத் தந்த
பரிசெனவே கோசிகப்பே ராரியனும்
வேள்விநிலை பண்ணுங் காலை.
95. அதையறிந்த தமிழரசி யாள்விட்டுத்
தடுப்பவவு னகலா னாக
அதையவர்கள் வந்துசொலப் படைத்தலைவ
னிளவலுட னாங்குச் சென்று
முதியவீது முறையல்ல உயிர்கொன்று
பகைதேட முயல வேண்டாம்
இதையொழிதி யெனவவனு மில்லையெனப்
பெயர்ந்ததற்பி னியற்ற லானான்,
96, கொதிக்கின்ற நெய்யினிலே) யிட்டுவறுத்
துணவுயிரைக் கொல்லும் வேளை
பதைக்கின்ற அவ்வுயிரைக் காப்பாற்றத்
தாடகையும் படையோ டேகிச்
சிதைக்கின்ற வுயிரிககா யவிழ்த்துவிட்டு
நெய்காயுந் தீய வித்துப்
புதைக்கின்ற வயிறெரிய வேள்விசெய்
முடியாது புறம்போ மென்றாள்,
37. அம்முனியு முளநொந்தவ் விடத்தைவிட்டுத்
தம்மவரோ டகன் றான், பின்னர்
இம்முறையே தன் னாட்டி. னிடைவேள்வி
'யெனும்புலைமை யில்லா வண்ணம்
செம்மையுடன் பார்த்துவரத் தாடகையுந்
தனிக்காப்புச் செய்தே காத்தாள்
இம்முறையி னீங்காக; இனிவடக்கில்
தசரதன தியல்பு காண்பாம்,
பக்கம்:இராவண காவியம்.pdf/223
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
