இராவண காவியம்
வேறு
13. பணிசெய் வோர்களும் பாங்குடை யோர்களும்
பார்க்கின்
அணிசெய் காதல் ராவரோ மாதருக் கலவும்
பிணிசெய் காரண மாமெனப் பேசியாங் கிருப்ப
மணிசெய் மண்டபம் வந்துநின் றொற்றர்கள் வணங்கி.
14. மன்னர் மன்ன வ வாழ்கவவ் வாரிய வஞ்சர்
இன்னல் செய்தனர் என்றனர்; இன்னலென் னென்ன
அன்னை போன் றதா டகையென, ஆம்கம தன்னைக்
கென் னை யென்றனன் கொன்றனர் சென்றன ரென் றார்.
15, என்ற சொற்செவி புகாமுன மிடியென வார்த்துக்
கொன்ற புல்லரைக் கொன் றில ரோகொடி யாடும்
முன் றில் காவலர் மறங்கடை நின்றரோ மூடர்
பொன்றி னாரில: ரேலிதோ போக்குவே னாவி,
16. என்று சீறியே இகலரி யேறுபோ லெழவே
வென்றி வேலவு! காவிடைத் தனிவரும் வேளை
நன்றி லா வட, வயோத்திவாழ் தசரத ராமன்
கொன்ற தோடமை யாதுசு வாகையுங் கொன்றான்.
17. கேள்வி வல்லவ! மொழிதர வின்னாமுங் கேட்டி
கோள்வ லம்படு கோசிக னெனுமுனி குறுகி
வேள்வி செய்தனன் தடுத்திட அயோத்தியை மேவி
வாளவ லம்பட ராமலக் குவரொடு வரவே.
18. தனித்து லாவிய தாடகை கண்டுமே தடுக்கப்
புனத்து மா னினைப் போலவே வன் கொலை புரிந்து
மனத்து நேர்வொடு செய்டஃப வேள்வியை மறுக்கச்
சினத்து ராமனச் சுவாகுவி னுயிரினைச் சிதைத்தான்.
19. எதிர்த்தல் இன்றுநன் றலவெனத் தெளிந்தமா ரீசன்
அதிர்த்த வுள்ளமோ டாயிடை நின்றுமே யகன்றன்;
கொதித்த நெய்யாடை வெந்தவூ னுண்டுடல் கொழுக்கச்
சிதைத்த ராமலக் குவரொடம் முனிவனுஞ் சென்றான்.
17. கோள்- கொலை, வா நா வலம் - தமிழர்,
பக்கம்:இராவண காவியம்.pdf/246
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
