பக்கம்:இராவண காவியம்.pdf/476

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


25. ஓவென் றுமரி னுள்ளுடைந் த னுக , ஏவொன் றுள்ளுற வேறிய மஞ்ஞைபோல் ஆவென் றேங்கிவண் டார்குழ லென்னிளங் கோவென் றோடிப்போய்க் குப்புற வீழ்ந்தனள். 26. விழுந்தெழுந்து விழுந்தெழுந் தேவிழுந் தெழுந்த விம்முறை யெண்ணில் வாகவே பொழிந்த வுண்கட் புனல்முழுக் காட்டியே குழைந்த செந்தூள் குழைத்துடல் பூசினாள். 27. தத்து வாள்நிலந் தாறுமா றாகவே கத்து வாளையை யோவெனக் கைகொடு மொத்து வாளுடல் மூரவந் தேனெனப் பித்தி போலப் பிதற்றிப் புலம்புவாள். 28. தலையெ டுத்தே யுடலொடு சார்த்துவாள் சிலையெ டுத்துவத் தேகையிற் சேர்த்துவாள் மயை டுத்தகை வாளுறத் தெவ்வரைத் தொலைய வெட்டெனத் தூக்கியே வெட்டுவாள். 29, கையை முத்திக் கலைமதி முத்திமா மெய்யை முத்தி விழிமுத்தித் தன்னுடல் நைய மொத்தி நடைமுத்தி வாய்திறந் தையை யோவென் றரற்றுவா ளின்ன ணம். வேறு 30. கண்ணே மணியேயென் கண்மணியிற் பூம்பாவாய் மண்ண மணியே மணியொளிருஞ் சேயொளியே எண்ணேயவ் வெண்ணி லெழுகின்ற நல்லுணர்வே அண்ணா வலங்கோல மாய்க்கிடக்கக் கண்டேனே. 31. பண்ணொத் துயர்ந்த தமிழ்ப் பாட்டின் பெரும்பயனே உண்ணத் தெவிட்டா வுடல்வளர்க்குஞ் செந்தேனே வண்ணத் தருங்கலமே வாடா மணமலரே எண்ணத் தொலையா விடர்க்கடலுள் வீழ்த்தனை யே. 26. ஏ-அம்பு. மஞ்ஞை -மயில். 16. செந்தூள - செஞ்சந்தனப்பொ டி. குருதி தோய்ந்து வறண்ட உடலில் கண்ணிர் படவே அது கரையக் கையால் தடவினாள்,