பக்கம்:இராவண காவியம்.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தன்னோடும் உடலம் 6. அம்முதல் னெளவீ றாகிய வெழுத்தை யறிந்தவு ஓரளி தினிற் றாமே தம்முறு துணை யாத் தடைசிறி தின்றித் தமிழறி வுடையவ ராவர், அம்முறை மேலு முயன் றிடிற் புலமை யடைகுவ ரையின் விதைப்போற் செம்மொழி வேறொன் றுளதெனப் புகல்வோர் தெரிதர வுரைக்கமுன் வருவீர்! 7. சொற்றொறும் பொருளின் சிறப்புமப் பொருளிற் சொற்பொருந் துறவமை சிறப்பும் சொற்றொட ரமைவின் சிறப்புமத் தொடரிற் சொற்பொரு ளமைதியின் சிறப்பும் கற்றொறு முள்ளங் களிக்கவத் தொடரிற் கருத்தமைந் திருக்கும் சிறப்பும் பெற்றுள தமிழ்த் தாய்க் கினியொரு சிறப்புப் பேசுவ தென துபே ரவாவே. 8. ஒருமொழி யேனு மினை யநாள் வரையு முலகெலாந் தேடி.யு, மடையா இருவகைக் கைகோ ளன்பிசைந் தணையோ டெழுதிணை யகம்புற மென்னும் பொருளினை யுடைய பழந்தமிழ்த் தாயைப் பொருளிலா ளெனப்பு கல் பொய்யர் மருளினை யுண்மைப் பொருளென மதிப்போர் மதியினுக் குவமையம் மதியே. 3. பேசுகற் குணமு மெழிதெழில் வனப்பும், பெரியர்சொற் கடந்திடா வொழுக்கும், வீசொளி மணிப்பூண் பெருக்கு, மேவுரிய முதுமையோ டிள மையும், வேறோர் 8. இருவகைக்கைகோள் - களவு, கற்பு. அகத்திணை ஏழாவன - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய் தல், பாலை, பெருந்திணை, கைக்கிளை என்பன. இவற்றிற்கு முறையே-வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் என் ப ன புறத்திணை க Oாகும்.