பக்கம்:இராவண காவியம்.pdf/93

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இலங்கைப் படலம் 88. பின்னலும் வல்லியும் பின்னுமுன் சாடக் கன்ன லுங் கைப்பக் கனி தமிழ் பாடித் தென்னையில் யாத்த செழும்புரி பூசல் துன்னியே யாடுவர் தோகை மயிலார். 89. முற்றிலீற் றிங்கள் முகத்தை மறைத்தே தெற்றியி லேறிச் சிறுமிய ரேசக் கொற்றவர் மானக் குறுநடைச் செல்வர் சிற்றில் சிதைத்துச் செருக்கொடு செல்வர். 90, சிற்றிலிற் பேதையர் செங்கழற் செல்வர் துற்றிட வெண்மணன் சோறு படைத்தும், மற்றும் புதுக்குடி வாழ்க்கை நட.ப்பைப் பெற்றவர் கண்டு பெருமகிழ் கொள்வர். 31, வாழிய மாமனை வாயிடை நெல்லுண் கோழி யெறிந்த கொடுங்குழை மைந்தர் ஆழி தடுப்ப வலந்து கடைத்தேர் பூமியின் வீழ்ந்து புலந்திடச் செய்யும். 92 செந்தமிழ் வாணர் சிறுவர்கள் தம்மைச் சந்தனத் தொட்டி சமைந்தகை வண் 44 குந்திட வைத்துக் குளிர்தகு மா க . மந்தி யிழுத்து மறுகிடைச் செல்லும். 33. சேய்தனை நாளும் சிறப்பொடு தாங்கும் ஞாய்தனைத் தாங்கி நடப்பவர் போல) ஆய்தமிழ்ச் சேயர் அருந்தமிழ் நூலாம் தாய்தனை" த் தாங்கித் தருக்கொடு செல்வர். 88. பின்னல்-சடை, வல்லி-பொற்கொடி , புரி - கயி று. 49. முற்றில்-முச்சி (சிறுமுறம்) தெற்றி திண் ஸோ , சிற் றில்-மணல்வீடு. 90. துற்றிட-உண்ண . 91. குழை-காதணி. ஆழி-சக்கரம். பூழி -குழைந்தசேறு, புழுதி, புலத்தல்-வெறுத்தல். மைந்தர் புலம் திடச் செய்யுமென்க. 93. ஞாய-தாய், திருக்கு-செருக்கு.