பக்கம்:இருட்டு ராஜா.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


8 இருட்டு ராஜா பொழுதும், மக்கள் வாயிலே சோறும்னு. இருட்டுற துக்கு முன்னாடியே சாப்பாட்டுக் கடையை முடிச்சிட்டு, சனங்க சுருண்டு படுத்திடுவாங்க. அந்த நிலையை இந்த ஊர்காரங்க இன்னும் தாண்டலே. எப்படா இருட்டும், நீட்டி நிமிரலாம்னு காத்திருப்பாங்க. துரங்குப்பூனைக...பூனைகளாவது எலிகிலி அகப்படு மான்னு ராத்திரி வேளைகளிலே அங்கையும் இங்கையும் ஒடும். இவங்க அசையமாட்டாங்க. சரியான கிடை பூதங்க! இதை அடிக்கடி சொல்வதில் முத்துமாலைக்கு ஒரு ஆனந்தம். சொல்லிவிட்டு கடகட என்று சிரிப்பாணியை உருட்டி விடுவான்,தெருவெல்லாம் புரண்டு ஒலிக்கும்படி, இரவு நேரங்கள்தான் அவனுடைய பகல் பொழுதுகள் ஆகும். பகல்கள் அவனுக்குத் தூங்கும் நேரம். ஒரு சமயம் அவன் சொன்னான்: 'எவரோ ஒரு ஞானி ஒருத்தன் கிட்டே உபதேசம் பண்ணினாராம். "ஆடுக ளோடு படுத்து விடு; குயில்களோடு எழுந்திரு'ன்னு சீக்கிரம் படுத்து, சீக்கிரமே எழுந்திருக்கிறது புத்திசாலித் தனம்னு அவரு சொன்னாராம். நான் அதிபுத்திசாலி. ராத்திரி படுக்கப்போறதும் கிடையாது; அதிகாலையிலே விழித்தெழுவதும் கிடையாது!எனக்கு ஏற்ற சீடப்பிள்ளை களும் ரெண்டு மூணு பேர் சேர்ந்திருக்காங்க...” சகாக்களை அழைப்பதற்காகத்தான் முத்துமாலை முதலில் தெரு மூலைகளில் நின்று சீட்டி அடிப்பான். நேரம் போகப்போக,சும்மா ஜாலியாகவும்,தான் உலாவி வருவதை அறிவிப்பதற்காகவும் ஒலி எழுப்புவான். சீட்டி ஒவியிலேயே பாட்டுக்களை ஊதித்தள்ளுவது உண்டு. "இந்த ஊர்க்காரங்க எனக்கு நன்றி கூறனும், என்னைப் பாராட்டனும், ராத்திரி பூரா நான் ரோந்து