பக்கம்:இருட்டு ராஜா.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100இருட்டு ராஜா

 திருட்டு நடந்திருக்கு, சிலைகளைத் திருட வந்து, திருடியும் போட்டாங்க, அவங்களைப் புடிச்சுவச்சிருக்கோம்னு சோல்லு. பெரியவங்க எல்லாம் இங்கே உடனே வரும்படி சொல்லு” என்றான்.

“அவன் போகவேண்டாம். சிலையை எடுத்துப் போக வந்தது தப்புதான். நீங்கதான் புடிச்சிட்டீங்களே? உங்க சிலைகள் உங்களுக்குக் கிடைச்சுப்போச்சு. வேணும்னா கொஞ்சம் ரூபா தந்திடுறேன். எங்களைப் போகவிடுங்க” என்றான் ‘கோட்டுவாலா’.

“து எப்படி முடியும்?”

“முத்துமாலை இவரு நம்ம ஊரு மாப்பிள்ளை, அதுதான் ஊராருக்கு விசயம் தெரியவேண்டாம்னு பாக்காரு.” என்று ஒரு தகவலை அறிவித்தான். முதலாவதாக அவர்களைத் தேடி வந்து சேதி சொன்னவன்.

“யாரு?”

“நம்ம ஊரு பூமியா பிள்ளைக்கு மருமகன். அவரு மக திரிபுரத்தின் மாப்பிள்ளை...”

“என்னது?” என்று அதிர்ந்தான் முத்துமாலை. “முருகா, இவன் மூஞ்சியிலே லைட்டை அடி!” என்றான்.

டார்ச் ஒளி அந்த ஆளின் முகத்தைப் பளிச்சென்று எடுத்துக் காட்டியது. பூமியை நோக்கித் தாழ்ந்த அந்த மூஞ்சியிலே காறித் துப்ப வேண்டும்போல் வந்தது முத்துமாலைக்கு. தரையில் தான் துப்பினான்.

“சுப்பய்யா, ஓடு எல்லாவீட்டிலும் சொல்லு பூமியா பிள்ளை மருமகன்... கந்தபிள்ளை, இவன் பேரு உமக்குத் தெரியுமா?”

“நாரம்புநாதன்...”

“வாரியக்கொண்டை! நாறும்பூநாதன்... பேருக்குக் குறைச்சல் இல்லே” என்று எரிச்சலோடு முணுமுணுத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இருட்டு_ராஜா.pdf/102&oldid=1139566" இலிருந்து மீள்விக்கப்பட்டது