பக்கம்:இருட்டு ராஜா.pdf/103

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வல்லிக்கண்ணன் ( 101 தான் முத்துமாலை. தொடர்ந்தான்; "சுப்பய்யா, ஊர்ப் பெரியவங்ககிட்டே இதையும் சொல்லு. சீக்கிரம் போ... பூமியாபிள்ளை வீட்டிலும் தகவல் சொல்லிட்டு வா.ஒடு!” சுப்பய்யா ஓடினான். முத்துமாலை அப்புறம் எதுவும் பேசவில்லை. திரிபுரத்தின் புருசனா இவன்? இவன் பணம் சம்பாதிக்கிறது இந்த வழியிலேதானா! சிலை திருடறது, கடத்தல் பண்றது... அயோக்கிய ராஸ்கல்... அவன் மனம் புழுங்கிக் குமைந்தது. சிறிது நேரத்திலேயே அந்த இடம் பரபரப்பின் கள மாக மாறியது. ஒருவராய், பலராய், கும்பலாய் ஓடிவந் தார்கள். ஜனங்கள், விளக்குகள் எடுத்து வந்தார்கள். அந்த இடத்தின் அமைதி ஆரவாரத்தில் அமிழ்ந்து மறைந்தது. - வந்தவர்கள் அனைவரும் கட்டுண்டு, தலைகவிழ்ந்து. மண்மீது உட்கார்ந்திருந்த இரண்டு பேரையும், நின்ற மாடசாமியையும் பார்த்தார்கள். வாயில் வந்தபடி ஏசி னார்கள், மாடசாமியை சிலர் அடிக்கவும் செய்தார்கள். சிலைகள், காட்சிப் பொருள்கள் போல், அவர்கள் பக்கத் தில் இருந்ததையும் கவனித்தார்கள். 'கோயில் சிலைகளைத் திருட உங்களுக்கு எப்படித் தான் மனசு வந்ததோ? இப்படி எத்தனை ஊர் கோயில் களிலே திருடி இருக்கிறீங்களோ, பாவிகளா!' என்று கைகளை நதட்டி முறித்து அவர்களைப் பழித்தார்கள். பெரியவர்களும், சின்னவர்களுமாய், ஆண்களும் பெண்களுமாய், ஊரே அங்கே திரண்டு விட்டது. முத்துமாலை நடந்ததைச் சொன்னான். "இவங்களை என்ன செய்யலாம்னு யோசனை சொல் லுங்க, கோயில் சிலைகளைத் திருடி வித்துப் பிழைக்கிற இ.7