பக்கம்:இருட்டு ராஜா.pdf/104

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


102 ) இருட்டு ராஜா துக்கென்றே ஒரு கும்பல் வேலை செய்யுது. அவங்களுக்கு அதிலே நல்ல பணமும் கிடைக்குது. இந்த ஆளும் அந்தக் கோஷ்டியிலே ஒருவன்னு தெரியுது. மாடசாமி இவங்க கையாள்.இவங்க மூணு பேரையும் போலீசிலே ஒப்படைக கிறதுதான் நல்லதுன்னு எனக்குப்படுது.இரண்டு பேரிலே இவன் பூமியாபிள்ளை மருமகனாம்...' . . பெரியவர்கள்தலையாட்டினார்கள். ஆமா, உம் உம் என்று ஒலிகுறிப்புகளும் தெறித்து விழுந்தன. - இந்தச் சமயத்தில் எதிர்பாராதது நடந்தது. திரி புரம் மங்கையைத் துரக்கிக் கொண்டு ஓடி வந்தாள். அவள் கூட மூத்த பெண்ணும் பையனும் மூச்சிறைக்க ஒடி வந்தார்கள். அவர்களுக்குக் கூட்டம் வழி விட்டது. அவள் கூட் டத்தின் நடுவில் வந்து நின்று எல்லோரையும் பார்த்தாள். தன் புருஷனையும் பார்த்தாள். ஊர்க்காரர்களைக் கும்பிட் டாள். 'உங்க எல்லாரையும் கும்பிடுறேன். இந்தப்பிள் ளைகள் முகத்தைப் பாத்து, இதுகளுக்காகவாவது, இது களோட அப்பாவை மன்னிச்சுருங்க...” "அதெப்படி மன்னிக்க முடியும்?' என்று வெடித் தான் முத்துமாலை. செய்து குத்தத்துக்கு தண்டனை வேண்டாமா?’’ "அவங்களை முதல்லேயே அடிச்சிருப்பீங்க, அது. மட்டுமில்லே. இந்த ஊர்ககாரங்க மத்தியிலே, இப்படிக் கையும் களவுமாய் பிடிபட்டு நிக்கிற அவமானமே அவங் களுக்கு ஒரு தண்டனைதான். இன்னும் போலீஸ்லே காட்டிக் குடுத்து, கேசு நடத்தி, ஜெயில் தண்டனை வேறே வாங்கிக் கொடுக்கணுமா? இந்தச்சின்னப்புள்ளைக தலைமேலே கெட்ட பேரும் சமூக தண்டனையும் சேராமக் காப்பாத்துங்க. உங்க காலிலே விழுந்து கெஞ்சிக் கேட் கிறேன்...' -