பக்கம்:இருட்டு ராஜா.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104இருட்டு ராஜா

 “என்னாங்க, வீட்டுக்கு வாங்களேன். விடிஞ்சதும் போகலாம்” என்று திரிபுரம் கூறியதை நாறும்பூ கவனிக்கவே யில்லை. மங்கை, “அப்பா, அப்பா நான் கூட வரட்டுமா?” என்று பிரியமாய்க் கேட்டதும் அவன் செவிகளில் ஏறவில்லை.

“நாங்களும் உங்க கூட வாரோம்” என்றாள் திரிபுரம்.

அதற்குதான் அவன் வாய் திறந்தான். வேண்டாம் லெட்டர் போடுவேன். அப்போ வந்தால் போதும் என்றான். போய் விட்டான்.

இது பயமுறுத்தலா, பிரியத்தோடு சொன்னதா என்பது அவளுக்குப் புரியவில்லை; முத்துமாலைக்கும் விளங்கவில்லை.

அவன் திரிபுரத்துக்காக ரொம்பவும் வருத்தப்பட்டான். அவனால் வேறு என்ன செய்ய இயலும்?


14

முத்துமாலை உள்ளத்தினுள் ரொம்பவும் நொறுங்கிப் போனான். ‘சீ, என்ன மனுசங்க, என்ன வாழ்க்கை’ என்ற அலுப்புச்சொற்களை அடிக்கடி மனசிலும், வெளிப்படையாகவும் உச்சரித்தான்.

திரிபுரசுந்தரியின் இறந்தகால வாழ்க்கையும், நிகழ் காலமும் எப்படிப்பட்டதாக இருந்திருப்பினும், இனி அவளுடைய எதிர்காலம் ஒளி நிறைந்ததாக இருக்காது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இருட்டு_ராஜா.pdf/106&oldid=1143529" இலிருந்து மீள்விக்கப்பட்டது