பக்கம்:இருட்டு ராஜா.pdf/109

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ومصر * --مم வல்லிக் கண்ணன் 107 'இந்த ஊரை விட்டு என்ன, இந்த உலகத்தை விட்டே நான் போய்விடலாம்...' "என்னடே முத்துமாலை, உனக்கு தொண்ணுறு வயசா ஆச்சு கிழவன் மாதிரி பேசுதியே?" 'சாவுக்கு வயசு ஒரு கணக்கா? பழம் உதிரப் பூ உதிரப் பிஞ்சு உதிரன்னு எல்லாம் உதிர்ந்துக் கிட்டுத் தானே இருக்கு!” 'அதுக்காக?' 'இந்த உலகத்திலே இருந்து நான் என்ன தான் செய்யப் போறேன்னு எனக்குள்ளேயே ஒரு சலிப்பு வளர்ந்து வருது. சாமியாரு பள்ளிக் கூடத்திலே நாம் படிச்சபோது அறநெறி வகுப்பிலே ஞானப்பிரகாசம் சாமியார் அடிக்கடி சொல்வாரே, அது என் ஞாபகத் திலேயே இருக்கு இறைவனால் நேசிக்கப்படுகிறவர்கள் இளம் பிராயத்திலேயே இறந்து போகிறார்கள் என்பார். நான் இறைவனாய் நேசிக்கப்பட வில்லைன்னு எனக்குத் தோணும். அப்படி இருந்தால் தான் நான் ரொம்பச் சின்ன வயசிலேயே செத்துப் போயிருப்பேனேயின்னு நான் நினைத்துக் கொள்வேன்...' "முத்துமாலை நீ ஏன் இதுமாதிரி எல்லாம் நினைக் கணும்? சந்தோஷமான விஷயங்களை நினைச்சுப்பாரு. எல்லோரும் சந்தோஷமா இருக்கும்படியான காரியங் களைச் செய்யணும்னு ஆசைப்படுவியா, அதை விட்டுப் போட்டு...” முத்துமாலை திடீரென்று புறப்பட்டு விட்டான். சரி தல்லபடியா போயிட்டு வா. எங்கே இருந்தாலும் என்னை நினைச்சுக்கோ. இதுதான் நம்ம கடைசிச் சந்திப்போ என்னமோ!' என்று சொல்லிப் போனான்.