பக்கம்:இருட்டு ராஜா.pdf/115

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வல்விக்கண்ணன் 1 3 எந்த மாப்பிள்ளைக்கு ஆசைப்பட்டு இத்தனை நான் இருந்தே? உடம்பிலே சூடு சொரணை இருந்தா இப்படி இருப்பியா, சவத்து மூளி என்றெல்லாம் ஏசினாள். வளர்மதி பொறுமையாக அனைத்தையும் சகித்துக் கொண்டுதான் நாளோட்டினாள். அந்த வீட்டில் மாடாக உழைத்தாள். இருந்தாலும், மாமியாரை திருப்திப்படுத்த முடியவில்லை. வாசலில் நின்று அவனையும் இவனையும்பார்க்கிறா. சன்னல் வழியாக எவன் எவனையோ பார்த்துச் சிரிக் கிறா. பால்காரன் கிட்டே பல்லை காட்டிக் குழையுதா, காய்கறி விற்க வாறவன் கிட்டே எல்லாம் இளிச்சு இளிச்சுப் பேசுதா’ என்று குற்றப் பட்டியலை நீட்டிக் கொண்டே போனாள் அந்த நீலி. ஒரு நாள் சோறு குழைந்து விட்டது என்று சொல்லி, கொள்ளிக்கட்டையை எடுத்து மருமகளுக்குச் சூடு போட் டாள் மாமியார். அதுக்குக் கூட கணவன் குமரகுரு தலை அயிட்டு அவளை கண்டிக்கவில்லை. இன்னொரு தடவை, அடுப்பில் பாலை பொங்க விட்டு விட்டாள் என்று அகப்பையால் தாக்கினாள். வளர் மதி குமரகுரு விடம் முறையிட்ட போது, நீ ஒளுங்காக் கவனிச்சு வேலைகளை செய்றதுக் கென்ன? நீ வேலை யிலே கெட்டிக்காரி ஆகணும் கிறதுக்காகத்தான் அம்மை இப்படிப் பண்ண வேண்டி ஏற்படுது' என்றான் அந்த சத்புத்திரன். அந்த அப்பாவிப் பெண் தனது நிலையை எண்ணி அழுது புழுங்கினாள். அப்படி அழுவதற்குக் கூட அந்த வீட்டில் அவளுக்கு உரிமை அளிக்கப்பட வில்லை. மூதேவி மூதேவி! இப்படி எப்ப பார்த்தாலும் அழுதுகண்ணிர் வடிச்சுக்கிட்டிருந்தா இந்த வீடு எப்படி உருப்படும்? விடிஞ்சாலும் அடைஞ்