பக்கம்:இருட்டு ராஜா.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லிக்கண்ணன்115

 கருதினாள். இதை அவள் யாரிடம் சொல்ல முடியும்? தன் மனசிடம் தான் அடிக்கடி கூறிக்கொண்டாள்.

ஒரு நாள் நடுப்பகலில் மாமியார், ஏதோ அல்ப காரணத்துக்காக—எண்ணெய் செம்பை கீழே போட்டு விட்டாள் என்று (அதில் என்ணெய் சில சொட்டுகளே இருந்த போதிலும்)— வளர்மதியின் தலைமயிரைப் பிடித்து இறுக்கி, அவள் மண்டையை சுவரில் ‘ணங்குணங் கென்று’ ஒசை எழும்படி மோதினாள்.

“சீத்துவம் கெட்ட மூதி, வழிச்சு நக்கித் தின்கலே? உருட்டிப் புரட்டி வயிறு வீங்கும்படி தின்கிறவளுக்கு இந்தச் செம்பைப் புடிக்கிறதுக்கு வலு இல்லாமலா போச்சு? சாமானை எல்லாம் நாசமாக்க வந்த மூதேவி” என்று ஏசிக்கொண்டே தாக்கினாள் அவள். “போ, வெளியே போடி எச்சிக்கலை” என்று மருமகளைப் பிடித்து வெளியே தள்ளினாள்.

வளர்மதி திண்ணையிலேயே உட்கார்ந்து அழுது கொண்டிருந்தாள். பகல் உணவுக்கு வீட்டுக்கு வந்த குமரகுரு அவளைப் பார்த்தவாறே உள்ளே போனான். ஏன், என்ன விஷயம் என்று கேட்க அவனுக்கு வாய் இல்லை; மன தைரியமும் கிடையாது, உள்ளே போய் அம்மாவின் குற்றச்சாடடுகளைக் கேட்ட பிறகுதான் அவன் வாயைத் திறப்பான். அது அவனது சுபாவமாக உறைந்திருந்தது.

அன்றும் அப்படித்தான் நடந்தது. அம்மா முறுக்கிய ஸ்குரூ அந்த பொம்மையை வேகமாக முடுக்கிவிட்டது. வெளியே எட்டிப் பார்த்து, ‘நீ இந்த வீட்டுக்கு சரிப்பட மாட்டே உன் அப்பா வீட்டுக்கே போய்ச்சேரு. உம், உடனேயே கிளம்பு’ என்று கத்தினான்.

வளர்மதி அப்படியே புறப்பட்டு விட்டாள். அந்த வீட்டில் அவளுக்கு சாப்பாடு வேண்டியிருக்கவில்லை. ‘இல்லை, நீ சாப்பிட்டு விட்டுத் தான் போகனும் என்று தாங்கித் தடுப்பதற்கு அங்கே ஒருவரும் இல்லை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இருட்டு_ராஜா.pdf/117&oldid=1143538" இலிருந்து மீள்விக்கப்பட்டது