பக்கம்:இருட்டு ராஜா.pdf/118

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


116 ( இருட்டு ராஜா பிறந்த ஊருக்கு அப்படி வந்து சேர்ந்தவளை ஊர்க் காரர்கள் அவரவர் இயல்புப்படி,மனம் போன போக்கில், விமர்சித்தார்கள். முத்துமாலை அந்தப் பெண்ணுக்காக மிக வருந் தினான். அது தலையெழுத்து இப்படி இருக்கு. அதுக்கு யாரு என்ன பண்ணமுடியும்?'என்றே பெரியவர்கள் அபிப் பிராயம் ஒலிபரப்பினார்கள். அவர்களின் ஏலாத்தனத்தை எண்ணிப் பெரு மூச்சு உயிர்த்தான் முத்துமாலை. அந்தப் பொட்டைப்பயல் குமரகுருவை ஒரு நா இல்லாட்டி ஒரு நா சரியான கேள்வி கேட்கணும்.அவனை மாதிரிப் பயல்களுக்கு புத்தி புகட்டுற விதத்திலே புகட்டணும் என்று மனசுக்குள் கறுவிக் கொண்டான். 16 விடிந்தும் விடியாமலுமிருந்த வைகறையில், யாரோ 'அண்ணாச்சி, அண்ணாச்சியோவ்' என்று கூப்பிட்டு, கதவைத் தட்டுவதை உணர்ந்த தனபாக்கியம் வாரிச் சுருட்டி எழுந்தாள். 'யாரது?’ என்று கேட்டாள். முத்துமாலை நன்றாகத் துங்கிக் கொண்டிருந்தான். 'நான்தான் மதினி,ராமதுரை' என்ற பதில் வந்ததும் "வாய்யா' என்று கூறியவாறே அவள் கதவை திறந்தாள். "என்ன விசேஷம், விடியத்துக்கு முன்னாலே அண்ணாச்சி யைத் தேடி வந்திருக்கே?' என்று விசாரித்தாள்.