பக்கம்:இருட்டு ராஜா.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லிக்கண்ணன்117

 ராமதுரை வீட்டுக்குள் வந்தான். “ஒரு அவசர காரியம். அண்ணாச்சி இன்னும் எழுந்திருக்கலியா?” என்று அங்குமிங்கும் பார்த்தான்.

முத்தொளி சிந்தி சுவரோடு ஒட்டியிருந்த சிறு விளக்கை அவள் தூண்டி விட்டாள்.வெளிச்சம் மங்கலாகப் பரவியது.

'“அண்ணாச்சியை எழுப்பனுமா? அவ்வளவு அவசரமா?”

"“ஆமா மதனி...உடனே எழுப்பினா நல்லது...” தயங்கித் தயங்கிப் பேசினான் அவன்.

அவன் குரலும் பார்வையும். ஏதோ நடக்கக்கூடாதது நடத்திருக்கிறது என்று எண்ணச் செய்தன.அவள் அறைக்குள்ளே போய்,முத்துமாலையை எழுப்பினாள். “எதிர்த்த வீட்டு துரை வந்திருக்கான். எதுக்கோ உங்களை கூப்பிடுறான்” என்று அவள் சொன்னது வெளியே நின்றவனின் காதுகளிலும் நன்றாக விழுந்தது.

முத்துமாலை நீட்டி நெளிந்து எழுந்து உட்கார்ந்தான். “என்ன துரை, இங்கே வா” என்று அழைத்தான்.

ராமதுரை அவன் அருகில் சென்று உட்கார்ந்து, ரகசியக் குரலில் பேசினான். “அண்ணாச்சி, நீலா இப்படிப் பண்ணுவான்னு நான் நினைக்கவேயில்லே...மோசம் பண்ணிப்போட்டா. வீட்டிலே அவளைக் காணலே...”

“வாய்க்காலுக்குப் போயிருப்பா, வரக் கொஞ்சம் நேரமாயிருக்கும். இதுக்குப் போயி...” என்று பரபரப்படையாமல் இழுத்தான் முத்துமாலை.

“இல்லே அண்ணாச்சி. நீலா பிளான் பண்ணித்தான் இப்படி செஞ்சிருக்கணும். வீட்டை விட்டே போயிட்டா. ராத்திரி பத்து மணி வரை வேலை எல்லாம் செஞ்சிக்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இருட்டு_ராஜா.pdf/119&oldid=1140038" இலிருந்து மீள்விக்கப்பட்டது