பக்கம்:இருட்டு ராஜா.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லிக்கண்ணன்121

 களுக்கு ஏற்படாது. அதனாலே பயமில்லாம கவலையில்லாம ஜாவியா கோயிலுக்குப் போவாங்க கடற்கரையிலே நிப்பாங்க. எப்படியும் நாம அவங்களைப் புடிச்சிரலாம்” என்று முத்துமாலை தெரிவித்தான்.

அரைமணி நேரத்துக்குப் பிறகுதான் திருச்செந்துருக்கு அடுத்த பஸ் என்று தெரிந்ததும், இரண்டுபேரும் ஒட்டலுக்குப் போய் சிற்றுண்டி சாப்பிட்டு வந்தார்கள். பஸ்சில் வசதியாக இடம் பிடித்துக் கொண்டார்கள்.

பயணத்தின் போது ராமதுரை நீலாவை திட்டிக் கொண்டே வந்தான். “மூக்கன் பயலுக்கு சரியானபடி பாடம் கத்துக்கொடுக்கணும். அவனைப் பார்த்ததுமே கழுத்திலே துண்டைப்போட்டு முறுக்கி புடரியிலே ரெண்டு கொடுத்து...” என்ற ரீதியில் முணுமுணுத்தபடி இருந்தான்.

அவனுடைய ஆத்திரம் ஒரளவுக்குத் தணியட்டும் என்று முத்துமாலை பொறுமையாக இருந்தான். திருச்செந்தூரை நெருங்கியபோது பேசலானான்; “துரை இப்போ ஆத்திரப்படறதிலே பிரயோசனமில்லே. ஆரம்பத்திலேயே இவ்வளவுக்கு முத்தவிடாம கண்காணிச்சு நடவடிக்கை எடுத்திருக்கணும். இப்போது இவ்வளவு தூரத்துக்கு ஆயிட்ட பிறகு, அவள் துணிஞ்சு திட்டம் போட்டு அவனோடு கூட வீட்டை விட்டு வெளியேறி வந்துவிட்ட பிற்பாடு ஏசுறதிலேயும், உன் மனசை நீயே குழப்பிக்கிடுறதிலேயும் லாபம் இல்லே. நீலா அந்தப் பயலோடு ஒடி வந்து, ராத்திரியை அவன்கூடக் கழிச்சுப்போட்டு. ஜாலியா ஊர் சுத்தவும் துணிஞ்சிருக்காள்னா, அவளுக்கு அவன் மீது பற்றுதலும் பிரியமும் நிறையவே ஏற்பட்டுருக்குன்னு தான் அர்த்தம். அவளையும் அவனையும் மிரட்டியும் உதைச்சும் பிரிச்சிடலாம். நீலாவைத் திரும்பவும் வீட்டுக்குக் கூட்டி வந்து உதைச்சு கார்வாரு பண்ணறதும் கஷ்டமில்லே. உடம்பினாலும், உள்ளத்தினாலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இருட்டு_ராஜா.pdf/123&oldid=1140044" இலிருந்து மீள்விக்கப்பட்டது