பக்கம்:இருட்டு ராஜா.pdf/124

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


123 இருட்டு ராஜா களங்கப்பட்டவளாத்தான் அவ இருப்பா. ஊரிலேயும் கட்ட பேரு தான் நிலைக்கும். அதனாலே அவளுடைய க்கையும் பாதிக்கப்படும். அவளுக்குக் கல்யாணம் ஆகிறதும் பெரிய பிரச்னையாகத் தான் ஆகிப்போகும். மூணு தாலு வருசம் கழியட்டும், மூடி மறைச்சு, துர தொலையிலே மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணிக் கொடுத்திடலாம்னு நினைச்சாலும், அதிலும் கிறதுக்குன்னே உண்மை விளம்பின்னு எவனாவது மோட்டைக் கடுதாசி எழுதிப் போடுவான். மூட்டை கட் டிக்கிட்டு ஊரு தேடிப்போயி, மாப்பிள்ளை விட்டுக்க: ரங்ககிட்டே பெண்ணைப்பத்தி வத்திவச்சிட்டு வாறதுக்கு நம்ம ஊரிலே ஆளுக ரெடியா இருப்பானுக...' ஆமாமா. இதுக்கு முன்னாடியும் அப்படியெல்லாம் ஞ்சிருக்கானுக தான். அது சரி, நீங்க என்ன செய்ய லாமுங் கிறீக அண்ணாச்சி?’’ "பணபலம் இருந்தா எதையும் வெற்றிகரமா சாதிச் சிடலாம். ஒடிப்போன பெண்ணை வீட்டுக்கு அழைச் .ே வந்து, எதுவுமே நடக்காதது போல் சமாளிச்சு, இடத்திலே கல்யாணம் பண்ணிக் கொடுத்து விட லாம். அப்படியும் நடக்கத்தான் செய்யுது. அல்லது, பனம் எதுவும் இல்லாம, உழைச்சுப் பிழைக்கிற அன்றா டங் காய்ச்சிகள் மத்தியிலும் இது மாதிரி விவகாரங்கள் பெரிய பிரச்னை ஆவதில்லே. வீட்டை விட்டு வெளியேறி அல்லும் அவளும் சேர்ந்து, வாழ்றவரை வாழ்வாங்க. இல்லேன்னா பிரிஞ்சு போவாங்க. அவள் வேறொருத் தனை தேடிக்கிடுவா; அவன் இன்னொருத்தியை சேர்த் துக்கிடுவான். நம்ம மாதிரி ரெண்டுங்கெட்டான் நிலை யிலே இருக்கிறவங்க-மத்தியதர வர்க்கம்னு பெரிசா பேர் பண்ணப்படுதே, அவங்க-மத்தியிலேதான் விவ காரம், வில்லங்கம் எல்லாம்...' f