பக்கம்:இருட்டு ராஜா.pdf/125

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வல்லிக்கண்ணன் ( 123 முத்துமாலை என்னதான் சொல்ல விரும்புகிறான் என்று புரிந்து கொள்ள இயலாதவனாய் ராமதுரை அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். "நான் என்ன நினைக்கிறேன்னா, நீலாவுக்கு மூக்க னைப் புடிச்சிருக்கு, அவன் பேரிலே அவளுக்கு ஆசை வளர்ந்திருக்கு. அதே மாதிரி அவனுக்கு அவ மீது ஆசை, பின்னாலே என்ன நிகழும், எப்படி முடியும்கிறதைப் பத் திக் கவலைப்படாம, ரெண்டுபேரும் வீட்டை விட்டு. ஊரை விட்டு, உற்றார் உறவினரை விட்டுவிட்டு வெளியே போகிற அளவுக்கு ஒருவரை ஒருவர் விரும்பி இருக்கி றாங்க. அவங்க வாழ்க்கையை, அவங்க எதிர்காலத்தை, அவங்களே அமைச்சுக்கிடட்டும்-அதிலே எதிர்ப்படுகிற இன்ப துன்பங்கனை, லாப நஷ்டங்களை அவங்களே எதிர் கொள்ளட்டும்னு விட்டுட வேண்டியதுதான். அந்தப் பெரிய மனசு உனக்கு வேணும்...” 'நீலாவும் மூக்கலும் கல்யாணம் பண்ணிக்கிடட் டும்னு விட்டுறவா? அப்படியா சொல்லுதீங்க அண் ன க்சி: 'நீலா எவனாவது ஒருத்தனைக் கல்யாணம் பண்ணிக் கிட்டு வாழ வேண்டியவள் தானே? முன்னைப்பின்னே தெரியாத எவனோ ஒருத்தனை கட்டிக்கிட்டு வாழிறதை விட அவளா விரும்பித் தேர்ந்து கொண்ட, அவளுக்கு நல்லாத் தெரிஞ்ச மூக்கனோடு சேர்ந்து வாழறதுனாவே என்ன கெட்டுப் போகப் போகுது?" முத்துமாலையின் பேச்சு ராமதுரைக்கு அதிர்ச்சி தந்தது. அது எப்படி அண்ணாச்சி முடியும்? அவன் சாதி என்ன, நம்ம சாதி என்ன? ஊரிலே காறித்துப்ப மாட்டாங்களா? நம்ம சொந்தக்காரங்க நம்மளை மதிப் பாங்களா?' என்று பட படத்தான். இப்ப ரொம்பத்தான் மதிக்கிறாங்களாக்கும்!" என்று சொல்லிச் சிரித்தான் முத்துமாலை. தங்கச்சிக்கு