பக்கம்:இருட்டு ராஜா.pdf/130

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


128 இருட்டு ராஜா காப்பாத்த வேண்டிய பொறுப்பு உனக்கு வந்திட்டுது. அஞ்சுநாள் ஆறுநாள், அல்லது ஒரு மாசம், ஜாலி பண்ணிட்டு அவளை உதறிவிடலாம்னு நீ உன் மனசிலே எண்ணியிருந்தால் அது பெரிய அயோக்கியத்தனம். அவளுக்குச் செய்கிற மகத்தான துரோகம். அவளுடைய எதிர்காலத்தை ஒரு பெண்ணின் வாழ்க்கையை-கொலை பண்ணிய குற்றமும் ஆகும். உங்க உறவு இவ்வளவு தூரம் முற்றிக் கணிஞ்சிட்டதுனாலே, நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக் கொண்டு வாழ்க்கை நடத்துவது தான் நியாயம் ஆகும். நீங்க இப்பவே நம்ம ஊருக்குத் திரும்பி வரணும்கிற அவசியம் எதுவும் இல்லே. தூத்துக் குடியிலோ, மதுரையிலோ, அல்லது உங்க மனசுக்குப் பிடிச்ச ஒரு நகரத்திலே போய் வசிக்கலாம். நீங்க எப்படிப் பிழைப்பீங்களோ, அது உங்க சாமர்த்தியத்தைப் பொறுத்தது. ஆனா, மூக்கா, ஒண்ணை மனசிலே வச்சுக்கோ, நீலாவை கைவிட்டு விடலாம்னு நினைக் காதே. உன்னை நம்பி எல்லோரையும் எல்லாத்தையும் துறந்திட்டு வந்திருக்கிற இந்தப் பெண்ணை ஏமாற்றி, இவளை அலைக் கழிய விட்டிராதே...' 'அப்படி எல்லாம் செய்ய மாட்டேன், ஐயா' என்று உணர்ச்சியோடு கூறி, கை எடுத்துக் கும்பிட்டான் மூக்கன். 'அப்ப சரி. இங்கேயே இவளுக்கு நீ தாலி கட்டி விடு. நாங்களே சாட்சியாக இருப்போம்' என்றான் முத்து . శత్య్ర , - நாலு பேரும் ஒரு கடைக்குப் போய், தாலிச் சங்கிலி வாங்கினார்கள்.கோயிலில் வைத்து மூக்கன், நீலாவுக்குத் தாலி கட்டினான். சாமியை கும்பிட்டுவிட்டு, ஒட்டலுக்குப் போய் விருந்து உண்டார்கள். 'நீலா, நீயாகத் தேடி அமைத்துக் கொண்ட வாழ்க்கை இது.என்றைக்கும் நீ சந்தோஷமா இருக்கும்படி